Friday, 13 December 2013

கற்பழிப்பு வழக்கில் நாராயண் சாயின் விசாரணை காவல் வரும் 18ம் தேதி வரை நீட்டிப்பு Judicial custody of narayan sai extended till 18th

Img கற்பழிப்பு வழக்கில் நாராயண் சாயின் விசாரணை காவல் வரும் 18ம் தேதி வரை நீட்டிப்பு Judicial custody of narayan sai extended till 18th

புதுடெல்லி, டிச.14–

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபு ஆசிரமம் நடத்தி வந்தார். இங்கு தங்கி படித்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவியை சாமியார் ஆசாராம் பாபு கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து ஆசாராம் பாபு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே ஆசாராம் பாபு மகன் நாராயண் சாய் மீதும் செக்ஸ் புகார் கூறப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் ஆசாராம் பாபுவும் அவரது மகனும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அக்டோபர் மாதம் போலீசில் புகார் செய்தார்.

2002–ம் ஆண்டு முதல் 2005–ம் ஆண்டு வரை சூரத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்த போது தன்னை நாராயண் சாய் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைய சகோதரி புகாரில் கூறியிருந்தார்.

1997–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை ஆசிரமத்தில் தங்கியிருந்ததாகவும் அப்போது, ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூத்த சகோதரி புகாரில் தெரிவித்து இருந்தனர்.

இந்த புகாரிலும் ஆசாராம் பாபு மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் மகன் நாராயண் சாய் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் 2 மாதத்துக்குப் பின்பு டெல்லி – அரியானா எல்லையில் பதுங்கி இருந்த நாராயணன் சாயை போலீசார் கடந்த 4ம் தேதி சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று அவரை சூரத் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

கற்பழிப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்துக்கும், இவ்வளவு நாளாக பதுங்கியிருந்த லூதியானாவுக்கும் நாராயண் சாயை அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் அவரது விசாரணை காவலை நீட்டிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

இதனையடுத்து, நாராயண் சாயின் விசாரணை காவலை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger