Img தேவயானி கோப்ரகடே கைது: அமெரிக்க அதிகாரி விசா விவரங்களை தவறாக படித்ததே காரணம் devyani khobragade arrested U.S. official visa information due to wrong lesson
நியுயார்க், டிச.25-
விசா விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார். விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160 ல் தனது சம்பளம் 4500 டாலர் என்று தேவயானி குறிப்பிட்டதை, சங்கீதா ரிச்சர்டு எதிர்பார்த்த சம்பளமாகவும், ஆனால் தேவயானி சங்கீதாவுக்கு 1560 டாலர் தர சம்மதித்தாகவும் தவறாக புரிந்து கொண்ட மார்க் ஸ்மித், தனது விசாரணையில் தேவயானி குற்றவாளி என துல்லிமாக அறிந்துள்ளதாக கூறி கைது செய்துள்ளார்.
இவ்விவரங்களை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் பரிசீலிக்கும்போது, தேவயாணி போதுமான சம்பளம் பெறுவதால் சங்கீதாவுக்கு அவர் சம்பளம் தரமுடியும் என்றும், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் சரியானது என முடிவுக்கு வரமுடியும் எனவும் டேனியல் தெரிவித்துள்ளார்.
ஸ்மித் செய்த சிறிய தவறால் எவ்வளவு பெரிய கொடூரமான விஷயம் நடந்துவிட்டது என டேனியல் மேலும் தெரிவித்துள்ளார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?