Img மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு சாமியார் கைது children harassment priest arrested in West Bangladesh
கொல்கத்தா, டிச. 26-
மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் மடம் நடத்தி வந்த சாமியர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர்களில் 3 சிறுவர்கள். அவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
'இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச் சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்' என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. போலீசார், சாமியார் மீது பிரிவு 377ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சாமியாரை போலீசார் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் சாமியாரின் மேற்பார்வையில் ஆசிரமத்தில் படித்து வந்துள்ளனர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?