Wednesday, 25 December 2013

2013 ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன் Casino magnate Adelson made 254 crore per day in 2013

Casino magnate Adelson made 254 crore per day in 2013 .

2013 ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன் Casino magnate Adelson made 254 crore per day in 2013

வாஷிங்டன், டிச. 26-

2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார்.

இங்குள்ள சூதாட்ட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அந்த விடுதிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு இந்த ஆண்டு கொள்ளை லாபம் கிடைத்துள்ளது.

இதையடுத்து கேசினோ அதிபர் ஷெல்டன் அடெல்சனின் ஒரு நாளைய வருமானம் 254 கோடி ரூபாய் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. இச்சாதனையின் மூலம் உலகின் முன்னணி கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டை அடெல்சன் முந்திவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் 41 மில்லியன் டாலர் சம்பாதித்த கேசினோ அதிபரின் சொத்து மதிப்பு 37 பில்லியன் டாலர் ஆகும். பேஸ்புக் வலைதள அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் இந்த ஆண்டில் ஒரு நாளைக்கு 230 கோடி வீதம் சம்பாதித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவதாக அமேசன் அதிபர் ஜெப் பெஸோஸ் உள்ளார். 
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger