'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா, அடாவடி , காத்தவராயன் , கேம் , மானஸ்தன் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த இவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த பைசூல் என்ற தொழில் அதிபரால் தான் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். பெரிய வைர வியாபாரி என்று கூறி பைசூல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், காதல் வலையில் சிக்கவைத்து, ரூ.50 லட்சம் மோசடி செய்துவிட்டார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். வடபழனி சாலிகிராமம் லோகைய்யா தெருவில் வசித்து வரும் ராதாவின் இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன்படி வடபழனி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா விசாரணை நடத்தி வருகிறார். நேற்று நடிகை ராதாவிடம் ஒரு மணி நேரம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் ஏமாற்றப்பட்டது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விரம் வருமாறு:– கடந்த 2008–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுந்தர் என்ற தயாரிப்பாளர் மூலம் பைசூல் எனக்கு அறிமுகமானார். திருவல்லிக்கேணியில் தைபூன் அலிகான் ரோட்டில் வசித்து வரும் அவரை கோடம்பாக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பைசூலை சந்தித்தேன். தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்றும், சினிமா படங்களுக்கு பைனாஸ் செய்து வருவதாகவும் பைசூல் கூறினார். இதன்பிறகு என்னை ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார். சினிமா சம்பந்தமாக பேசுவதற்காக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்த அவர், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். இதனை நான் நம்பிவிட்டேன். இதன் பிறகு இருவரும் 2008–ம் ஆண்டு முதல் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தோம். ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறும் போதெல்லாம் பைசூல் தட்டிக்கழித்து வந்தார். வைர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரியான பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அவசர தேவை என்று கூறி என்னிடம் பணம் கேட்டார். எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.12 லட்சம் கொடுத்தேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரது தேவைக்காக ரூ.50 லட்சம் வரை என்னிடம் வாங்கியுள்ளார். பைசூல் என்னிடம் பழகியபோது தனது பெயரை ஷியாம் என்று கூறி ஏமாற்றியுள்ளார். கடந்த ஆண்டுதான் இது எனக்கு தெரிந்தது. இதன் பின்னர் எனது வீட்டுக்கு வருவதை பைசூல் குறைத்துக் கொண்டார். இதனால் மனமுடைந்த நான் திருவல்லிக்கேணியில் அவர் வசிக்கும் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றேன். அப்போது நாம் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், ஏன் வீட்டுக்கு வரவில்லை என்றும் பைசூலிடம் கேட்டேன். உடனே அவர் நீ இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறியதுடன், உடனடியாக கிளம்பாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டினார். நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது கொன்று விடுவதாக மிரட்டினார்.3 ஆண்டுக்கு மேல் என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, பலமுறை வற்புறுத்தி என்னுடன் செக்ஸ் உறவுவைத்துக் கொண்ட பைசூல், நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை என்னிடம் இருந்து வாங்கி ஏமாற்றி விட்டார். அவரை நம்பி எனது சினிமா தொழிலையும் நான் விட்டு விட்டேன். என்னை ஏமாற்றிய பைசூல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது பணத்தை மீட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ராதா வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகை ராதாவை ஏமாற்றியதாக கூறப்படும் தொழில் அதிபரை விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. ராதா தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களையும், பைசூல் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். இதை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். இதற்கிடையே நடிகை ராதா படுக்கையில் இருந்தபோது அவரை வீடியோவில் ஆபாசமாக படம் எடுத்ததாக தொழில் அதிபர் பைசூல் மீது புகார் கூறியிருந்தார். இதுபற்றி உதவி கமிஷனர் விஜயசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, 'இதுபற்றியும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்....
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?