'மொகரம்' அரசு விடுமுறை நவம்பர் 15 ம் தேதிக்கு மாற்றம் muharram festival Govt holiday date changed as Nov 15
சென்னை, நவ. 11-
தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில், நவம்பர் 14-ம் தேதி இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகைக்கான அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளது.
மொகரம் பண்டிகை தொடர்பாக தமிழ்நாடு தலைமை காஜி, தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "மொகரம் மாதத்துக்கான புதிய பிறை இதுவரை தென்படாததால் நவம்பர் 6-ம் தேதியை மொகரம் முதல் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் இருந்து 10-ம் நாள், அதாவது நவம்பர் 15-ம் தேதி மொகரம் பண்டிகை கொண்டாடப்படும். எனவே, நவம்பர் 14-ம் தேதிக்குப் பதில் நவம்பர் 15-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக மாற்றி அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதனை பரிசீலனை செய்த அரசு, 15-ம் தேதியை மொகரம் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அரசு நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?