மதம் மாறிய காதலுக்கு எதிர்ப்பு: துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற பாகிஸ்தான் ஜோடி pakistan lovers attempt suicide by shooting selves
Tamil News
இஸ்லாமாபாத், அக். 13-
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சஹிவால் மாவட்டத்தை சேர்ந்த ஆபித்ஹீசேன் (20) அதே பகுதியில் வசிக்கும் ஷீபா மசி (19) என்ற கிருஸ்துவ பெண்ணை உயிருக்குயிராக காதலித்து வந்தார்.
இந்த மதம்மாறிய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் கடும் எதிரிப்பு தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் ஷீபாவின் பெற்றோர் தங்கள் மதத்தை சேர்ந்த வேறொருவருக்கு ஷீபாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, தங்களது காதல் நிறைவேறாத துக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
கடந்த வியாழக்கிழமை தனிமையான ஓரிடத்திற்கு சென்ற அவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் மாறி,மாறி சுட்டுக்கொண்டனர்.
குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த காதல் ஜோடியை அவ்வழியாக சென்றவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தங்களது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வருவதை அறிந்த ஆபித் ஆத்திரமடைந்து அவளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை நாடகம் ஆடுவதாக ஷீபாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளர். இது தொடாபாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?