இளம்பெண் பாலியல் புகாரில் கைது செய்ய நடவடிக்கை: கருப்பசாமி பாண்டியன் முன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு young girl molested arrest action karuppasamy pandian bail manu
Tamil NewsToday, 05:30
நெல்லை, செப்.19-
நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது நெல்லை டவுணை சேர்ந்த தமிழரசி என்ற இளம்பெண் போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சுமித் சரணிடம் கொடுத்துள்ள மனுவில், நான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியனை சந்தித்து பேசினேன். இதைத் தொடர்ந்து அவரது அழைப்பை ஏற்று குற்றாலம் பங்களாவுக்கு, நானும் என்னுடைய தந்தையும் சென்றோம்.
அங்கு எனது தந்தையை அறையை விட்டு வெளியேற்றி விட்டு கருப்பசாமி பாண்டியன் ஆபாசமாக பேசினார். மேலும் பாலியல் தொந்தரவு கொடுத்து, கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
டி.ஐ.ஜி. சுமித் சரண் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி கருப்பசாமி பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் தொந்தரவு, பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவரது உதவியாளர் அல்லல் கார்த்திக் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து கருப்பசாமி பாண்டியனும், அவரது உதவியாளரும் கேரளா தப்பிச் சென்று விட்டதாக தெரிகிறது.
அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். இந்த நிலையில் கருப்பசாமிபாண்டியன் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "தி.மு.க உள்கட்சி தேர்தல் தொடர்பாக விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மீது தலைமைக்கழகத்தில் புகார் செய்தேன்.
இந்த அரசியல் விரோதம் காரணமாக என் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?