காதல் கணவருடன் சேர்ந்து வாழ கைக்குழந்தையுடன், 3 ஆண்டாக போராடும் இளம்பெண் woman three years struggle police complaint
Tamil NewsToday, 05:30
சென்னை, செப். 19–
தண்டையார்பேட்டை சிவாஜி நகரில் வசித்து வருபவர் சுகுணா. இவர் நேற்று தனது கைகுழந்தையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
எனது வீட்டு அருகில் வசித்து வந்த காசிராம் என்பவர் 4½ ஆண்டுக்கு முன்னர் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் கோவைக்கு என்னை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார். பெண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் சென்னைக்கு வந்து அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அப்போது எனது கணவரை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு அவரது குடும்பத்தினர் என்னையும், எனது குழந்தையையும் தாக்கினர்.
2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் கணவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்த நான் கொடுமைகளை அனுபவித்தேன். தற்போது கணவர் என்னை பிரிந்து சென்று விட்டார். அவரை திருமணம் செய்து குழந்தை பெற்ற பின்னர் 3½ ஆண்டுகளாக அவருடன் சேர்ந்து வாழ்வதற்கு போராடி வருகிறேன். எனது தாயார் கூலி வேலை செய்து என்னை காப்பாற்றி வருகிறார்.
நானும் எனது குழந்தையும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாடு அதில் கூறப்பட்டுள்ளது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?