முஸ்லிம் உலக அழகிக்கான போட்டியில் நைஜீரிய பெண்ணுக்கு பட்டம் Nigerian wins Muslim only beauty pageant in Jakarta
Tamil News
ஜகர்த்தா, செப். 20-
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப்போட்டி புதன்கிழமை நடந்தது. உலகிலேயே அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில் நடந்த இப்போட்டியில் உலக முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் இருந்து அழகிகள் வந்து கலந்துகொண்டனர்.
இஸ்லாம் மதக்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியின் இறுதியில் 20 அழகிகள் தேர்வு செய்யபட்டனர். அதில் நைஜீரியாவை சேர்ந்த ஒபாபியி ஆயிஷா அஜிபோலா என்ற 21 வயது பெண் 'உலக முஸ்லிமா 2013' என்ற இந்த பட்டத்தை வென்றார்.
ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 500 பேர்களில் இருந்து நைஜீரியாவின் அஜிபோலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2200 அமெரிக்க டாலர் பரிசளிக்கப்படுகிறது. மேலும் அவர் மெக்கா மற்றும் இந்தியா சென்று வர டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டியை நடத்தக்கூடாது என்று முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?