விஷ்ணுவர்தன் இயக்கத்தில் விஜய்- சூர்யா!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
ஆரம்பம் படத்தை தொடர்ந்து விஜய் சூர்யாவுடன் கூட்டணி சேரவுள்ளார் விஷ்னுவர்தன்.
பில்லா, சர்வம் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் படம் ஆரம்பம்.
இப்படத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி, ரானா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் இந்தாண்டு தீபாவளி ரேசில் கலமிறங்கவிருக்கிறது. இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளன.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவரமாக உழைத்து வரும் இயக்குனர் விஷ்ணுவர்தன், இதுவரை தமிழில் 5 படங்களும், தெலுங்கில் ஒரு படமும் இயக்கியுள்ளார்.
தமிழில் இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் அஜித், ஆர்யாவுமே கதாநாயகர்களாக வளம் வந்த வண்ணமுள்ளது.
இதன் நிறத்தை மாற்ற தற்போது விஷ்ணுவர்தன் முடிவு செய்துள்ளாராம்.
அதனால், ஆரம்பம் படத்திற்கு பிறகு விஜய், சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
இதற்கிடையில் கோலிவுட்டிலும் ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்தரன் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கப்போகிறார் என தண்டோரா அடித்து வருகின்றனர்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?