அஜித், விஜய், சூர்யா இடத்தில் கார்த்திக்? : '23 கோடி' உற்சாகத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' மற்றும் 'பிரியாணி' ஆகிய படங்களின் சேட்டிலைட் ரைட்ஸை 23 கோடி ரூபாய்க்கு சன் டிவி வாங்கியுள்ளது.
கார்த்தி நடித்து வரும் இரண்டு படங்களான 'ஆல் இன் ஆல் அழகுராஜா' மற்றும் 'பிரியாணி' ஆகிய படங்களை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் தீபாவளிக்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தையும், அடுத்த வருட பொங்கலுக்கு 'பிரியாணி' படத்தையும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஒருபக்கம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கு தியேட்டர்களை புக்கிங் செய்யும் வேலைகள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் படத்தின் சேட்டிலட் ரைட்ஸும் பெரிய தொகைக்கு விலை போயிருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த 'தலைவா' படத்தை 15 கோடிக்கும், அஜித்தின் 'வீரம்' படத்தை 13 கோடிக்கும், சூர்யாவின் அடுத்த படத்தை 15 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ள சன் டிவி நிறுவனம் கார்த்தி நடித்த இந்த இரண்டு படங்களையும் தலா 11.5 கோடி ரூபாய் வீதம் 23 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக சந்தோஷப்பட்டிருக்கிறார் ஞானவேல்ராஜா.
"ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் இந்த விலைக்கு போயிருப்பது அஜித், விஜய், சூர்யா படங்களின் பிஸினசை கார்த்தி நெருங்கி விட்டதாகவும், இதுவரை கார்த்தி நடித்த 8 படங்களிலேயே அவரின் இந்த சாதனை அவர் எந்த இடத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுவதாகவும் உற்சாகமாக தெரிவித்துள்ளார்" ஞானவேல்ராஜா.
நாலு நல்ல வெளிக்கம்பெனி படங்கள்ல நடிச்சிக்கிட்டிருந்த ஹீரோவை 'கம்பெனி ஆர்ட்டிஸ்ட்'டா மாத்திட்டு பேச்சைப்பாரு…
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?