கேர்ள்ப்ரெண்டாக வர்றியா?
கேர்ள்ப்ரெண்டாக வர்றியா?
kanavin kamavilaiyaattu
கேர்ள்ப்ரெண்டாக வர்றியா? கையில் முத்தம் கொடுத்துவிட்டு போ... இளம்பெண்ணிடம் சேட்டை கிளுகிளுப்பு திமுக மாவட்ட செயலாளர்
கேர்ள்ப்ரெண்டாக வர்றியா? கையில் முத்தம் கொடுத்துவிட்டு போ... இளம்பெண்ணிடம் சேட்டை கிளுகிளுப்பு திமுக மாவட்ட செயலாளர்
திமுகவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கானா என திமுக தொண்டர்களால் அழைக்கப்படும் கருப்பசாமி பாண்டியன், இவர் சொந்த கட்சியான திமுகவைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் அதிரடி பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசி,
நீண்ட கால கட்சிக்காரரான தனது தந்தையுடன் தமிழரசி கானாவிடம் கட்சிப் பதவி கேட்டு சென்றுள்ளார், அப்போது கானாவின் உதவியாளர் குற்றாலத்தில் உள்ள கானாவின் பங்களாவிற்கு வருமாறு கூறினார். இதனால் தமிழரசியும் அவரது தந்தையும் 28ம் தேதி மாலை குற்றாலம் பங்களாவிற்கு சென்றார்களாம், அங்கு தனது தந்தையை வெளியே இருக்க சொல்லிவிட்டு, தன்னை மட்டும் உள் அறைக்குள் அழைத்து முதலில் குடும்பம், அரசியல் பற்றி விசாரித்து விட்டு பின் மோசமாக பேசியுள்ளார், அரசியலில் நல்ல சூழலுக்கு வரவேண்டும் என்றால், அவருக்கு கேர்ள் பிரண்டாக இருக்கும்படி கூறினார். சுக துக்கங்களில் பங்குகொள்ளும்படியும், அதற்காக எல்லா வசதிகளையும் செய்துதருவதாகவும் கூறினார். எல்லோர் முன்னிலையிலும் என்னோடு காரில் வரமுடியாது. உனக்காக கார் வாங்கித் தருகிறேன். அதில் வரவேண்டும். என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றார் என்று கூறினார்.
மேலும் கூறிய அவர் பெற்றோரிடம் பக்குவமாக எடுத்துக்கூறி, இதற்கு சம்மதித்தால், என் கையில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போ என்றார். உங்கள் பேத்தி, வயது இருப்பேன். இதெல்லாம் முறையா என்றேன். அப்போது அவர் என்னை, நீயாக தேடிவந்துவிடு. இல்லையென்றால் எப்படி வழிக்கு கொண்டுவரத்தெரியும் என்றார்.உடனே வெளியே வந்துவிட்டேன். பின் தன் தாயின் மூலமாக தந்தையிடம் நடந்ததை கூறினாராம், அதன் பின் ஸ்டாலினை சந்தித்து கானா மீது இந்த புகாரை தெரிவித்த போது அவர்கள் இதை பொருட்படுத்தவில்லை என்றும் தம்மை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவும் அனுமதிக்கவிலை என்றும் கூறியுள்ளார், நேற்று நெல்லை காவல்துறையில் வழக்கு கொடுத்த போது அதை போலிஸ் எடுக்கவில்லை என்றும் அதனால் தான் இன்று டிஐஜி சரக அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல் துறையினர்.
# கையில் எல்லாம் முத்தம் கேட்கிறாரா, இவர் திமுக மாவட்ட செயலாளரா? பாம்பே பாட்சா வா?
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?