"குத்துப்பாட்டு சான்ஸாவது குடுங்க…" : ரெடியா இருக்காராம் ஸ்ரேயா!
by abtamil
ஆண் நண்பருடனான ...
நஸ்ரியா, லட்சுமி மேனன், அமலா பால், பிந்துமாதவி என நேற்று பீல்டுக்கு வந்த புது ஹீரோயின்கள் எல்லோரும் கையில் நான்கைந்து படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார்கள்.
இதனால் எல்லா டைரக்டர்களும், புரொட்யூசர்களும் தன்னைத் தேடி வந்து சான்ஸ் தருவார்கள் என்று பெருத்த நம்பிக்கையில் இருந்த ஸ்ரேயா டோட்டல் அப்செட்டில் இருக்கிறார்.
கடைசியாக சந்திரா என்ற தமிழ்ப்படத்தில் நடித்தார் ஸ்ரேயா. ஆனால் அந்தப்படம் இன்னும் ரிலீஸானபாடில்லை. இதனால் டல்லான தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த இதுதான் சரியான வழி என்று " குத்துப்பாட்டுக்கு ஆடலாம்" என்கிற புது முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஸ்ரேயா.
நீங்க எவ்ளோ பேமஸான ஹீரோயின் நீங்க போய் குத்துப்பாட்டுக்கு ஆடினா..? நல்லாவா இருக்கும் என்று கேட்டால் :
"என்னோட உடல்வாகு அதுக்கு ரொம்பவே ஷூட்டாகும். அதுமட்டுமில்லாம இப்படி ஆடுறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.
என்னோட மார்க்கெட் இப்பவும் ஸ்டெடியா இருக்குன்னு நான் நம்புறேன். நடிக்க வந்த பின்னாடி இதுதான் பண்ணுவேன், அத பண்ண மாட்டேன்னு சொல்லவே கூடாது. எதைக்குடுத்தாலும் அதை ஒரு கை பார்த்துடணும்.
நான் பீக்ல இருந்தப்போ கூட குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கேன்.( வடிவேலு கூட ஆடுனதைச் சொல்றார்…) என்கிறார் ஸ்ரேயா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?