இத்தனை ரசிகர்கள் எனக்கு கிடைப்பார்கள் என நினைக்கவில்லை:நஸ்ரியா பூரிப்பு!
ஆண் நண்பருடனான .நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியா நாசிம் கூறியது: தமிழில் நய்யாண்டி, ராஜா ராணி, ஜீவாவுடன் ஒரு படம், கார்த்தியுடன் ரஞ்சித் இயக்கும் படம், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறேன். நேரம் படத்துக்குமுன்பாகவே பல படங்கள் ஒப்பந்தமாகிவிட்டது. மலையாளத்திலும் 3 படங்களில் நடிக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பு, இத்தனை ரசிகர்கள் எனக்கு கிடைப்பார்கள் என நினைக்கவில்லை. இது எனக்கு பயமாக இருக்கிறது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் அதிகரித்துள்ளது.தொடர்ந்து ரொமான்டிக் கதை படங்களிலேயே நடிப்பதாக சொல்கிறார்கள். கதைக்களம் ஒன்று போல் தெரிந்தாலும் படம் சொல்லும் விஷயம், எனது கேரக்டர் என எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கும். சினிமாவில் நடிக்க வந்ததால் படிப்பை தொடர முடியவில்லை. இருந்தாலும் அஞ்சல் வழியாக பிகாம் படிக்க ஆரம்பித்தேன். இப்போது அதுகூட முடியவில்லை. ஆனாலும் எனது டிகிரி படிப்பை முழுமையாக முடிப்பேன். அதற்கான நேரம் வரும். இவ்வாறு நஸ்ரியா நாசிம் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?