Friday, 9 August 2013

இந்திய ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாடிய ஒபாமா Obamas chose Indian restaurant for birthday




வாஷிங்டன், ஆக. 9-

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கேம்ப் டேவிட்டில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விருந்து அளித்து மகிழ்ந்தார்.

இதற்காக இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஒரு ரசிகா என்ற ஓட்டலை ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும் தேர்வு செய்தனர். ஒபாமா தனது பிறந்தநாளையொட்டி, மனைவி மிச்செலுடன் ரசிகா ஓட்டலில் உணவு அருந்த சென்றதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமாவும், மிச்செலும் ஓட்டலுக்கு வருவதைப் பார்க்க தெருவில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அந்த ஓட்டலின் உரிமையாளர் பெயர் அசோக் பஜாஜ். டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த ஓட்டலை திறந்தது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger