Friday, 9 August 2013

வியட்நாமில் 40 வருடங்களுக்கு முன் காட்டிற்குள் பதுங்கிய தந்தை மகன் மீட்பு vietnam pair coaxed out of jungle


வியட்நாமில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னால் ஹோவான் லங் என்பவர் தனது தந்தை, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது நடைபெற்ற போரில் ஏற்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் அவரது மனைவியும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் தப்பித்த ஹோவும், அவரது தந்தையும் மத்திய குவாங் நிகாய் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காடுகளிடையே பதுங்கிவிட்டனர். அதன்பின் அவர்களை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

காட்டிற்குள் மரத்தின் மீது பூமியில் இருந்து ஐந்தடி உயரத்தில் அமைத்துக் கொண்ட மரவீடு ஒன்றில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். விலங்குகளை வேட்டையாட அம்புகளையும், கொல்வதற்கு கத்திகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.

மரங்களை வெட்டுவதற்காக சிறிய கோடரி ஒன்றையும் செய்து வைத்திருந்தனர். இடுப்பில் அரையாடை மட்டுமே அவர்கள் அணிந்திருந்தனர். சோளம், பழங்கள் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் வேர்களையே உணவாக உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னால் ஹோவின் சகோதரர் அவர்களைக் கண்டுபிடித்துள்ளார்.

ஆனால், அவர்கள் இருவரும் காட்டைவிட்டு வர மறுத்துவிட்டனர். ஒரு நாள் அவர்களைப் பார்க்க நேரிட்ட உள்ளூர் மக்களுக்கு அவர்களின் காட்டுத்தனமான தோற்றமும், வித்தியாசமான சைகைகளும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இவர்களைப் பற்றி அம்மக்கள் உள்ளூர் சமூகத் தலைவர்களிடம் தெரிவித்தனர். அதன்பின்னர் கடந்த வியாழன் அன்று, அவர்களைத் தேடி ஒரு குழு காட்டிற்குள் சென்றது. ஐந்து மணி நேரத் தேடுதலுக்குப்பின் மரவீட்டில் அவர்களைக் கண்டுபிடித்த குழு, அவர்களை காட்டிற்கு வெளியே அழைத்து வந்துள்ளது.

அந்த வீட்டில் ஹோவின் தந்தை தனது மிலிட்டரி ஆடைகளையும், தனது மகன் சிறுவயதில் அணிந்திருந்த சிவப்பு கோட் ஒன்றையும் பத்திரமாக வைத்திருந்தார்.

ஹோவிற்கு ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசத் தெரிந்தது என்று கூறும் அதிகாரிகள், சமூகத்தில் அவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளும் முதல் கட்டமாக, அவர்களுக்கு வேண்டிய மருத்துவ சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger