குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போன்ற
சத்தான ஆகாரம் எதுவும் இல்லை. ஆனால்
தாய்ப்பால் கொடுத்தால் தங்கள்
அழகு போய்விடுமோ என தவறாக கருதி பல
தாய்மார்கள் பால் தருவதில்லை.
வேலைக்கு செல்லும் தாய்மார் தங்கள்
குழந்தைகளுக்கு பால் தர இயல்வதில்லை.
பிரசவத்தின்போது தாய் இறந்துவிட்டாலும்
சேய்க்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது.
இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும்
வகையில் மேற்கு வங்காள மாநிலத்தின்
தலைநகர் கொல்கத்தாவில், நாட்டின்
முதலாவது பொதுத்துறை தாய்ப்பால்
வங்கி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
மாநில முதல்-
மந்திரி மம்தா பானர்ஜி இதை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பிறந்த
ஒரு குழந்தையின் அடிப்படைத்
தேவையை இந்த புதுமையான திட்டம்
நிறைவேற்றி வைக்கும். மிகுந்த கவனத்துடன்
அதிநவீன வசதிகளுடன் இந்த தாய்ப்பால்
வங்கி தொடங்கப்பட்டுள்ளது. எனவே இதில்
தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தாய்ப்பால் பெற முடியாத
குழந்தைகளுக்கு இங்கு தாய்ப்பால் கிடைக்கும்
என குறிப்பிட்டார்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?