நஷ்ட ஈடாக பணம் வேண்டாம் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுங்கள்: உயிரிழந்த வீரரின் மனைவி ஆவேசம்
காஷ்மீர் மாநில எல்லை அருகே பூஞ்ச் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து உயிரிழந்த வீரர்களில் ஒருவரான விஜய் ராயின் மனைவி புஷ்பா ராய் கூறும்போது, ‘எல்லையில் நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், தலை துண்டிக்கப்படுகிறார்கள். இவற்றுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எவ்வளவு காலம் தான் பாகிஸ்தானின் இதுபோன்ற தாக்குதல்களை பொறுக்க முடியும். 10 லட்ச ரூபாய் கொண்டு எனது கணவரின் உயிரை திரும்ப பெற முடியுமா? எங்களுக்கு எந்த வித நஷ்ட ஈடும் வேண்டாம். பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுங்கள், அது போதும்’ என்றார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, உயிரிழந்த மற்றொரு வீரரான நாயக் பிரேம்நாத் சிங்கின் உறவினர்கள் பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?