Wednesday 7 August 2013

ஏழைக்குடும்பம் தத்தளிக்கிறது 3 மகன்கள் கிட்னி செயலிழப்பு

ஏழைக்குடும்பம் தத்தளிக்கிறது 3 மகன்கள்
கிட்னி செயலிழப்பு

சிறுநீரகம் செயலிழந்த 3 மகன்களை பிழைக்க
வைக்க ஒரு ஏழைக்குடும்பம் வழி தெரியாமல்
தத்தளித்து வருகிறது.

ஒரு மகனுக்கு தந்தையும்,
இன்னொரு மகனுக்கு வேறு ஒரு இறந்தவர்
கிட்னியும் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரு மகன்
மட்டும் இன்னும் போராடி வருகிறார்.

வேலூர்
மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா அகரம்
சேரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித்.
சைக்கிளில் காய்கறி வியாபாரம்
செய்து வருகிறார்.
இவரது மனைவி ரெஜீனா பேகம்.
இவர்களுக்கு அஸ்லாம் பாஷா (25), அன்சர் (19),
யாசீன் (17) என 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டு 2வது மகன்
அன்சருக்கு திடீரென்று சிறுநீரகங்கள்
செயலிழந்தது.இதையடுத்து,
அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சைக்காக அன்சர்
அனுமதிக்கப்பட்டார். உடனடியாக சிறுநீரகம்
கிடைக்கவில்லை. அதனால்,
மகனுக்கு தன்னுடைய
ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அப்துல்
மஜித் முடிவு செய்தார்.
அவரது ஒரு சிறுநீரகத்தை எடுத்து அன்சருக்கு
பொருத்தினர். அந்த நேரத்தில் மற்ற 2
மகன்களும் உடல்நிலை சரியில்லாமல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டாக்டர்கள் குழுவினர்
பரிசோதனை செய்து பார்த்ததில்,
இரண்டு பேரின் சிறுநீரகங்களும்
செயலிழந்து இருப்பது தெரியவந்தது.இதனால்,
மூளைச்சாவு உடல் உறுப்பு தானம் திட்டத்தில்
சிறுநீரகத்திற்காக அப்துல் மஜித்
பதிவு செய்தார். 2 மகன்களும் கடந்த 2
ஆண்டுகளுக்கு மேலாக டயாலிசிஸ்
செய்து வந்தனர். இந்நிலையில்,
மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம்
இருந்து தானமாக கிடைத்த
ஒரு சிறுநீரகத்தை அஸ்லாம்
பாஷாவிற்கு டாக்டர்கள் பொருத்த
முடிவு செய்தனர்.
அதன்படி, அரசு பொது மருத்துவமனையில்
கடந்த ஏப்ரல் 2ம் தேதி தானமாக கிடைத்த
சிறுநீரகத்தை அஸ்லாம் பாஷாவிற்கு டாக்டர்கள்
பொருத்தினர். கடைசி மகன் யாசீனுக்கு இன்னும்
சிறுநீரகம் கிடைக்கவில்லை. அதனால்,
அரசு பொது மருத்துவமனையில் யாசீன்
டயாலிசிஸ் செய்து வருகிறார்.

இதுதொடர்பாக
அப்துல் மஜித் கூறுகையில், ‘‘எங்கள் குடும்பம்
ஏழ்மையானது. நான் சைக்கிளில்
காய்கறி விற்பனையில் கிடைக்கும்
வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும்.
என்னுடைய மூத்த மகன் அஸ்லாம் பாஷா பிபிஏ
படித்துள்ளான். 2வது மகன் அன்சர் 10ம்
வகுப்பு, 3வது மகன் யாசீன் 12ம்
வகுப்பு படித்துள்ளான்.
குடும்ப வறுமையினால்
மகன்களை அதற்கு மேல் படிக்க வைக்க
முடியவில்லை. 2010ம்
ஆண்டு அன்சருக்கு சிறுநீரகங்கள்
செயலிழந்தது. நான் என்னுடைய
ஒரு சிறுநீரகத்தை கொடுத்தேன். அதன்பின்,
அடுத்தடுத்து ஒரே நேரத்தில் மற்ற மகன்களின்
சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது.

பதிவு செய்து வைத்ததில் இருந்து வந்த
ஒரு சிறுநீரகம் அஸ்லாம்
பாஷாவிற்கு கிடைத்துவிட்டது.
ஆனால், என்னுடைய கடைசி மகன்
யாசீனுக்கு இன்னும் சிறுநீரகம்
கிடைக்கவில்லை. மகன்களின் சிகிச்சைக்காக
செம்மஞ்சேரியில் உறவினர் வீட்டில்
தங்கியுள்ளேன்’’ என்று கண்ணீர்
விட்டு அழுதார்.டாக்டர்கள் கூறுகையில்,
அப்துல் மஜித்தின் 3 மகன்களின் சிறுநீரகங்களும்
செயலிழந்துவிட்டது.

அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில்,
இது ஒரு மரபு ரீதியான சிறுநீரக பாதிப்பு நோய்
(ஆல்போர்ட்) என்று தெரியவந்தது. 2
மகன்களுக்கு மாற்று சிறுநீரகம்
பொருத்தப்பட்டுவிட்டது. 3வது மகனுக்கும்
விரைவில் சிறுநீரகம் பொருத்தப்படும்’’ என்றார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger