விதிமுறைகளை மீறிய வகையில் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 2 தனியார் டி.வி.
சேனல்களுக்கு ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் தனியார் டி.வி. சேனல்களுக்ளு ரூ. 30 லட்சம் வரை அபராதம் விதிக்கும் அதிகாரத்தை இந்திய ஒளிபரப்பாளர்கள் அமைப்பு, ஒளிபரப்பாளர்கள் ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (பி.சி.சி.சி.) கடந்த மாதம் 19-ந்தேதி வழங்கியது.
இந்நிலையில், ‘பிக் சி.பி.எஸ்.லவ்’, ‘பிக் சி.பி.எஸ்.ஸ்பார்க்’ ஆகிய தனியார் சேனல்கள் ஆபாச காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்புவதாக மத்திய ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன. இந்த புகார்களை மத்திய அமைச்சகம் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது.
இதனையடுத்து, அந்த சேனல்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை கண்காணித்த ஆணைய அதிகாரிகள், அவை ஒளிபரப்பிய ஆபாச காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஒழுங்குமுறை விதிகளை மீறி ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய ‘பிக் சி.பி.எஸ்.லவ்’ சேனலுக்கு ரூ. 10 லட்சமும், ‘பிக் சி.பி.எஸ்.ஸ்பார்க்’ சேனலுக்கு ரூ. 2 1/2 லட்சமும் அபராதம் விதித்து ஒளிபரப்பு ஒழுங்கு முறை ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அபராதம் விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இந்த இரு சேனல்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அந்த 2 சேனல்களும் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ‘ஸ்க்ரோல்’ ஒளிபரப்ப வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?