Wednesday, 17 July 2013

மிஸ்டுகாலில் தொடங்கி மரணத்தில் முடிந்த இளவரசனின் காதல் கதை

சில ஆண்டுகளுக்கு முன்பு

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன் இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இளவரசனின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. தொடர்ச்சியாக 4, 5 நாட்கள் தொடர்ந்து அஎதே மிஸ்டுகால் . இதையடுத்து இளவசரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தனது பெயர் திவ்யா என்று அறிமுகப்படுத்தி கொண்டார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி போனில் பேசி கொண்டனர். போனில் பேசி பழக்கம் ஏற்பட. ஒரு நாள் ஜூஸ் கடையில் வைத்து அவர்கள் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு அவர்களிடையே காதலை வளர்த்தது.

அக்டோபர் 10

பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். காதல் ஜோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு அவர்கள் சேலம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் சரணடைந்தனர். திவ்யாவின் பெற்றோர் மகளை அழைத்தும் அவர் வரமறுத்து விட்டார்.

நவம்பர் மாதம் 7

இதையடுத்து நவம்பர் மாதம் 7-ந் தேதி திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கலவரம் வெடித்து நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக நவம்பர் 9-ந் தேதி 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 146 பேர் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 11

நவம்பர் 11-ந் தேதி தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய தலைவர் புனியா, அரசியல் கட்சி தலைவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் விசாரணை நடத்தினர்.

நவம்பர் 15

நவம்பர் 15-ந் தேதி இந்த கலவர வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் திவ்யாவின் தாய் தனது மகள் கடத்தப்பட்டார் என்று தர்மபுரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதில் ஆஜராகிய திவ்யா இளவரனுடன் விரும்பித்தான் சென்றேன் என்று கூறினார். இதையடுத்து இளவரசன்-திவ்யா பெங்களூரில் வசித்து வந்தனர். பின்னர் பிரச்சினை சுமூகமானதையடுத்து அவர்கள் தர்மபுரி வெண்ணம்பட்டியில் உள்ளவீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர்.

மார்ச் 27

2013-ம் ஆண்டு மார்ச் மாதம் திவ்யாவின் தாய் தேன்மொழி தனது மகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மார்ச் 27-ந் தேதி ஆஜரான திவ்யா இளவரசனுடன் விரும்பி சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.

ஜூன் மாதம்

ஜூன் மாதம் தான் குழப்பமான மனநிலையில் உள்ளதால் தாய் தேன்மொழியுடன் செல்ல விரும்புவதாக கோர்ட்டில் திவ்யா வாக்குமூலம் அளித்தார்.

ஜூலை மாதம்

ஜூலை 1-ந் தேதி நீதிபதிகளிடம் திவ்யா வாக்குமூலம். ஜூலை 3-ந் தேதி இளவரனுடன் இனி வாழ விரும்பவில்லை என்று திவ்யா அறிவித்தார்.

ஆட்கொணர்வு மனு மீது இன்று தீர்ப்பு என நீதிபதிகள் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் தான் நேற்று இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கலவரத்தில் தொடங்கிய இவர்களின் காதல் திருமண வாழ்க்கை தற்போது இளவரசனின் மரணத்தில் முடிந்து இருக்கிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger