அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், இமாச்சல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா வந்திருந்தார். இன்று அதிகாலை அந்த பெண், அங்குள்ள நெடுஞ்சாலையின் அருகே பேருந்துக்காக காத்திருந்தார்.அப்போது அங்கு டிரக்கில் வந்த மூன்று பேர் அவருக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றனர்.ஆனால், அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் வண்டியை ஓட்டிச் சென்ற அவர்கள், அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக, அந்த பெண் கொடுத்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டெல்லியில் கடந்த ஆண்டு பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி 6பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கின்றன.கடந்த மாதம் அயர்லாந்தில் இருந்து வந்திருந்த 21 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் மத்திய பிரதேசத்திற்கு சைக்கிள் பயணம் வந்த சுவிட்சர்லாந்து பெண் கற்பழிக்கப்பட்டார். ஆக்ராவில்காமுகனின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இங்கிலாந்து பெண் ஒருவர், ஓட்டல் மாடியில் இருந்து குதித்தார்.இதுபோன்று பாலியல் தொந்தரவுகள்அதிகரித்திருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை 35 சதவீதம் குறைந்திருப்பதாக வர்த்தக மற்றும் தொழில் கூட்டுறவு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?