Tuesday, 2 April 2013

கள்ள உறவு ( கள்ளக் காதல் ) செய்த மனைவின் கழுத்தை கருவருத்த கணவன்

 கள்ள உறவு ( கள்ள காதல் ) செய்த மனைவின் கழுத்தை கருவருத்த  கணவன்

செங்கல்பட்டு டவுனில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
 
மதுரையும், கவுரியும் தனி வீட்டில் வசித்து வந்தனர். கவுரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இந்த விஷயம் மதுரைக்கு ஏற்கனவே தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனால் கவுரி அதை கண்டு கொள்ளவில்லை.
 
இந்த நிலையில் கவுரியின் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது. இதனால் மனைவியை மதுரை மீண்டும் கண்டித்தார். நமது குடும்பம் கவுரவமான குடும்பம். மகன்கள் மற்றும் மகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளோம். உன் நடத்தை மற்றவர்களுக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய் விடும் என்று அறிவுரை கூறினார்.
 
ஆனால் கணவர் கூறிய அறிவுரைகளை கவுரி கேட்க வில்லை. தொடர்ந்து கள்ளக்காதலனை சந்தித்து வந்தார். கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் நீண்ட நேரம் தகராறு நடந்தது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். இன்று அதிகாலை மதுரை தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
 
வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் கவுரி துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மதுரை கத்தியுடன் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger