முகமூடி’ படம் கொடுத்த பெரிய அளவிலான தோல்வி டைரக்டர் மிஷ்கினை சொந்தமாக புரொடக்ஷன் கம்பெனி தொடங்க வைக்கும் அளவுக்கு கொண்டு சென்று விட்டது.
அதன் வி்ளைவாக சில நாட்களுக்கு முன்பு தனது புரொடக்ஷன் கம்பெனியின் பெயரை அறிவித்த மிஸ்கின் இன்று தனது பேனரில் தயாராகும் முதல் படத்தை ஆரம்பித்திருக்கிறார்.
lone wolf என்ற அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் தொடக்க விழா சென்னையில் இன்று அவரது அலுவலகத்தில் நடந்தது.
எழுத்தாளர் பிரபஞ்சன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, படத்தயாரிப்பாளர் கமீலா நாசர், நடிகர் செல்வா உட்பட பலர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் ஹீரோவாக டைரக்டர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீ நடிக்கிறார்.
மிஸ்கின் டைரக்ஷனில் நடிப்பது கூறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் அவர்,
நான் கொடுத்து வைத்தவன். முதல் படம் பாலாஜி சக்திவேல், இரண்டாவது படம் மிஷ்கின் என்று தமிழ்சினிமாவில் பிரபலமான டைரக்டர்களின் படங்களில் பணிபுரிவது என் பாக்கியம், என் முதல் இரண்டு படங்களுமே கதை அமைப்பில் மட்டுமின்றி தலைப்பிலும் மிகவும் வித்தியாசமாக உள்ளது எனக்கு பெருமையானது. நான் இங்கே மிஸ்கினிடம் நிறையவே பயின்று வருகிறேன் என்றும், அவர் படத்தில் நடிப்பதற்கு முக்கிய தகுதி புத்தகம் படிப்பதுதான் என்றும் கூறினார்.
ஓப்பனிங் எல்லாம் சரியாத்தான் இருக்கு... ஆனா ப்னிஷிங்...? வெயிட் பண்ணிப்பார்ப்போம்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?