மராட்டிய மாநிலம், பஷான் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், கையெழுத்து மேம்பாடு மற்றும் உடற்பயிற்சி
ஆசிரியராக பணியாற்றுபவர் பிரதீப் கோட்டாஸ்கர் (50).
இவரிடம் பயிற்சி பெறும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளை பாலியல் தொல்லை செய்ததாக அந்த பள்ளியின் ஆசிரியைகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் முன்னிலையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 10 முதல் 12 வயதுக்குட்பட்ட 22 மாணவிகள், பிரதீப் கோட்டாஸ்கர் தங்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. போலீசாரின் விசாரணையில் அவர் தவறு செய்தது உறுதியானதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?