Monday, 2 April 2012

நல்லதோர் வீணை ... ( நேசம் + உடான்ஸ் அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம் )

 
 
 

 
குறும்படம் இயக்க வேண்டுமென்ற எண்ணம் சில வருடங்களாகவே மனதில் இருந்தும் அதற்கான நேரமும் , சந்தர்ப்பமும் அமையவில்லை ... குறிப்பாக கலைஞர் தொலைகாட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை ஆரம்பித்த வருடமே கதையை முடிவு செய்தும் அதை எடுப்பதற்கான சூழல் இல்லை ...

வழக்கம் போல சினிமா விமர்சனங்களில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த பொழுது , குறும்படங்களையும் விமர்சனம் செய்யலாமே என மூன்றாம் கோணம் ஷஹி கொடுத்த ஆலோசனைக்கேற்ப " குறும்பட கார்னர் " பகுதியில் சில குறும்படங்களை விமர்சனம் செய்து வந்தேன் ... விமர்சனங்களுக்காக குறும்படங்களை பார்க்க தொடங்கியதில் மீண்டும் என் குறும்பட ஆசை துளிர்க்க தொடங்கியது ...

இதற்கிடையில் நேசம் + உடான்ஸ் அமைப்பினரின் புற்றுநோய் விழிப்புணர்வு கதை , கட்டுரை , குறும்பட போட்டிகளுக்கான அறிவுப்பு வரவே நாம் எடுக்கப்போகும் முதல் குறும்படமே ஒரு நல்ல நோக்கத்திற்காக இருக்கட்டுமே என்ற எண்ணம் என்னை மேலும் உந்தியது ...

அலுவல்களும் , குறுகிய கால அவகாசமும் இடையூறுகளாக இருந்த போதிலும் நினைத்த படி இரண்டே நாட்களில் குறும்படத்தை முடிக்க முடிந்ததில் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்வதோடு எனக்கு உறுதுணையாய் இருந்த நடிகர் சேஷன்,ஒளிப்பதிவாளர் ஆனந்த் சாரி , எடிட்டர் கார்த்திக் , இசையமைப்பாளர் உதய் மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...

எனது குறும்படத்தை புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக தேர்ந்தெடுத்தமைக்கும் , சான்றிதழ் வழங்கி கெளரவித்தமைக்கும் நேசம் + உடான்ஸ் அமைப்பினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...இது வரை என் எழுத்துக்களை தொடர்ந்து படித்து நிறை , குறைகளை சுட்டிக்காட்டி உற்சாகம் அளித்து வரும் நண்பர்களும் , அன்பர்களும் அதே ஆதரவை என் புது முயற்சிக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதோ குறும்படத்திற்கான இணைப்பை தருகிறேன் ..

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger