நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன், பிரபு, சிவ கார்த்திகேயன், ராம்ஜி
இசை: அனிருத் ரவி சந்தர்
இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்
எளிமையான கதை அம்சத்துடன் அற்புதமான திரைபடம் 3
உயர்ந்த எதிர்பார்ப்புகளை கொண்ட 3 திரைப்படம் சூப்பர் ஸ்டார் மகளை (ஐஸ்வர்யா) இயக்குனராக்கி இருக்கிறது. கமல்ஹாசன் மகள் ஸ்ருதி மற்றும் தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ்
சேர்ந்து இத் திரை படத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். மேலும் கொல வெறி பாடல் இத் திரை படத்தின் சுவாசமாக இருக்கிறது. இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு இது கன்னி திரை படமாகும். ஒரு முற்றிலும் வேறுபட்ட கதை அம்சங்களை கொண்ட விருதுகளுக்கு உரியதான படமாகும். தனுஷ்க்கு படத்தில் சிக்கலான பாத்திரம். படம் பார்த்தால் புரியும். ஸ்ருதி நடிப்பை பற்றி சொல்லவே தேவை இல்லை. அனிருத் இசையமைத்த கொல வெறி பாடல் மெகா ஹிட். இப் படத்தின் உயிர் மூச்சாக கருதப்படுகிறது என்பதை இது நிரூபிக்கிறது. நல்ல இசை மற்றும் கவர்ச்சியான பின்னணியை கொண்டுள்ளது.
கதை:
இத் திரைப் படத்தில் ராம் என்ற கதா பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் இலக்கிய ரீதியான பாத்திரத்தில்வருகிறார். ஜனனி என்ற கதா பாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். காதலை மையமாக கொண்டு இரண்டு தரப்பினரும் பிரச்சனையை உருவாக்கும் தருணங்களும். தன் உணர்வுகளும், கொந்தளிப்பும், கோபம் வேதனையையும் திரைக்கதைக்கு பலமாக உள்ளது. சீராக செல்லும் இரண்டாவது பகுதி ஒரு வித்தியாசமான வழியில் ஒரு உளவியல் த்ரில்லர் படமாக நிறைவடைகிறது.
ஆஸ்கார் வென்ற ரெசுல் பூக்குட்டி ஒலி விளைவுகளால் காட்சிகளுக்கு தெம்பு ஏற்படுத்துகிறார். மொத்தத்தில் துரதிர்ஷ்டவசமான சஸ்பென்ஸ் கொண்ட அதிஷ்ட திரைப்படம் 3
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?