Wednesday 25 April 2012

கனத்த மனதுடன் பதிவுகளில் இருந்து வெளியேறுகிறேன்!





லா லீகா கிண்ணமிழப்பு + சம்பியன்ஸ் லீக் தோல்விக்கு பின்னரும்  பார்சிலோனாவை இன்னமும் அதிகமாக  நேசிக்கிற ஒரு சராசரி இல்லை இல்லை , ஒரு பார்சிலோனா வெறியன ாக உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.. 

இது ஒரு பதிவாக இல்லாமல் எனது ஒரு பிரியாவிடையாக கொள்ளுங்கள்.


இன்று சம்பியன்ச் கிண்னத்தின் இரண்டாம் அரையிறுதியில் செல்சியாவிடம் வீழ்ந்தது பார்சிலோனா. செல்சியா சூப்பர் கேம் மச்சி! அதுவும் பத்து பேருடன்! தவளை தன் வாயால் கெடும்ங்கிற மாதிரி பார்சிலோனா கெட்டது அதுவா� �ே தான், மெஸ்ஸி தனது வாழ்வின் முதல் பெனால்டி வெளியில் அடித்தார், சொதப்பல் ஸ்ரார்ட். சும்மா சொல்லக்கூடாது செல்சியாவோட தடுப்பு ஆட்டம் பிரம்மாதம். முதல் பாதியில் பார்சிலோனா காட்டிய வேகம் இரண்டாம் பாதியில் காட்டாததால் வந்தது பரிதாபம். செல்சியாவோ மட்ரிட்டோ அல்லது முனீக்கொ எல்லாருக்கும் பெஸ்ட் ஆஃப் லக். 

நாளை இடம்பெறப்போகும் போட்டியி� �் தனது சொந்த மண்ணில் முனீக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைவது மட்ரிட் அணிக்கு பெரிய சவாலாக இருக்கப்போவது இல்லை. ஒன்றுக்கு பூச்சியம் என்று கோல் அடித்தாலே போதுமானதாக இருக்கும் காரணம் மட்ரிட் ஏற்கனவே முனீக்கில் நடந்த போட்டியில் ஒரு "away" கோல் போட்டு இருப்பதால். 

ஆக எனது கணிப்பின் படி இறுதிப்போட்டியில் ஆடப்போவது செல்சியா மற்று ம் மட்ரிட் அணிகள் தான். இரு அணிகளையும் பார்க்கப்போனால்  செல்சியாவைவிட மட்ரிட் பலம் கூடிய அணியாக இருக்கின்றது.எனது கணிப்பின் படி  செல்சியா மற்றும் மட்ரிட் ஆகிய அணிகள் முனீக்கில் இறுதிப்போட்டி ஆடும் பட்சத்தில் , அந்த மைதானம் இரு அணிகளுக்கும் பொதுவானது. என்ன? தங்களது அணியான முனீக் அணியை தோற்கடித்த கடுப்பில் , முனீக் ரசிகர்களது ஆதரவு செல்சி பக்கம் சாயலாம். அது மட்� ��ும் தான் மட்ரிட்டுக்கு பாதகமான ஒன்றாக இருக்கப்போகிறது.

ஆனால் முனீக் அணிக்கு எதிராகவே அவர்கள் மைதானத்தில் கோல் போட்ட மட்ரிட் அணிக்கு இந்த உளவியல் சவால் ஒன்றும் பெரிய எதிர் தாக்கமாக இருக்கப்போவதில்லை. அது போக சாதரணமாகவே மட்ரிட்டுடன் ஒப்பிடும் பொழுது சற்று நலிந்த கழகமான செல்சியாவை இன்றைய போட்டி மேலும் நலிவடைய வைத்திருக்கிறது. ஏன் � ��ொல்கிறேன் என்றால் இன்று கோல் போட்டு செல்சியாவின் வெற்றியை உறுதி செய்த மியரல்ஸ், அணியின் பிரதான பின்கள வீரருமான ஜோன் டெர்ரி, இன்னொரு முக்கியமான  பின்கள வீரரான ரமிர்ஸ் ஆகியோர் சிவப்பு அட்டை காரணமாக அடுத்த போட்டியில் விளையாட முடியாது. இது உண்மையில் செல்சியாவின் பலத்தை பாதியாக குறைத்திருக்கிறது எனலாம். மியரல்ஸின் இடத்துக்கு டொரைஸ் வரலாம் என எதிர் பார்கிறேன். இவை யெல்லாம் கிட்டத்தட்ட மட்ரிட்டின் பத்தாவது தடவை இண்ணம் வெல்லும் கனைவை நனவாக்கும் என நம்புகிறேன்.

இத்தனையும் பொய்த்துப்போய் நாளை முனீக்கிடம் மட்ரிட் வாங்கி கட்டினாலோ அல்லது இறுதிபோட்டிக்கு நுழைந்து அங்கு நலிந்து, போய் இருக்கும் செல்சியாவிடம் வாங்கி கட்டி உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை செல்சியாவி டம் மட்ரிட் தாரை வார்த்தாலோ, சீசனின் ஆரம்பத்தில் நன்றாக ஆடி இறுதியில் சொதப்பிய பார்சிலோனாவை விட சொதப்பல் அணி மட்ரிட்டாக இருக்கும் என்றால் மறு பேச்சில்லை.

நாளைய தினம் தப்பி தவறி மட்ரிட்டை முனீக் வீழ்த்தினால் கிண்னம் முனீக் வசமாகும் என்பது எனது கணிப்பு. எழுத எழுத நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. சீரியசாகவே சொல்கிறேன் , மனது கனத்துப்ப� ��ய் உளது. ஒரு ரசிகனாக நிறைய நொந்து போய் உள்லேன். இப்போதே நிறைய எழுதிவிட்டதாக உணர்கிறேன். தனியே கீழே உள்ள பந்தியை பதிவாக இட்டு முடிக்கத்தான் ஆரம்பத்தில் எண்ணம். ஆனாலும் இந்த அரையிறுயின் முடிவிலும் அடுத்து நடைபெறப்போகும் இறுதிப்போட்டி தொடர்பிலும் கருத்தறிய, எனது உதைபந்து பதிவுகளை எதிர் பார்த்திருக்கும் யாரேனும் இருந்தால் அவர்களை ஏமாற்ற வேண்டாமே என்று தான் மேலே உ ள்ள போட்டிக்கான் சிறு குறிப்பு தந்தேன்.

அடுத்த லா லீகா சீசன் வரைக்கும் அனேகமாக இனி உதைபந்து பதிவுகள் என்னிடம் இருந்து வராது என்பது எனது 99% கருத்து`. எவராச்சும் ஏமாந்து போனா அடியேனை மன்னிச்சூ.... எனது உதை பந்து பதிவுகளில் பின்னூட்டமிட்டும் , பதிவுகளை வரவேற்று படித்து  ஆதரவளித்த சகல வாசகர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 

இப்போது நண்பன் JZ உடன் சில வார்த்தைகள்....  உன்னோட செம ஃபன்னு மச்சி, எல்லா சப்போர்ட்டுக்கும் தாங்க்ஸ். நமது பின்னூட விவாதங்களில் நிறைய கலாய்ச்சோம் நிறைய கத்துக்கிட்டோம்.பார்சிலோனா இல்லாத மட்ரிட்டையும் மட்ரிட் இல்லாத பார்சிலோனாவையும் நினைத்தாலே கடுப்பா இல்ல???? இந்த இரண்டுக்கிடையான போட்டி தான் லாலீகாவை அழகாக்குகிறது, ஆரோக்கியமாக வைத்திருக்கி� ��து என்பது எனது கருத்து நண்பா. ரொம்ப நன்றி நண்பா.... ஆனாலும் சோகமா போனாலும் சும்மா போகல... அடுத்த லா லீகா + சம்பியன்ஸ் கிண்ணம் என்று விட்டதை பிடிப்போம் என்று இவ்விடத்தில் கூறி எனது இதர பதிவுகளுக்கு இதே சுவாரசியத்துடன் நமது பின்னூட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையிலும் கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்.....! மீண்டும் அடுத்த லா லீகாவில் சந்திப்போம் !!!


http://newsmalar.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger