Wednesday, 25 April 2012

நான் ரசித்தசிரிப்புகள் 9



நான் ரசித்தசிரிப்புகள் 9

சோப்பு விளம்பரத்துல நடிக்க ஒரு பொண்ணு தேவை!
பொண்ணு அழகா இருக்கணுமா?
இல்ல அழுக்கா இருக்கணும்!
   &n bsp;           உஷா சாரதி

தலைவர்கள் மேலே ஊழல் புகார் வந்ததும் நிருபர்கள் எல்லோருக்கும் வெள்ளைப்பேப்பரை வரிசையா கொடுத்தாரே என்ன விஷயம்?
வெள்ளை அறிக்கை தர்றாராம்!.
                       தேனி முருகேசன்

டாக்டர் பட்டம் கொடுக்க வந்தவங்க கிட்ட நம்ம தலைவர் எதுக்கு பல் டாக்டர் பட்டம் கேக்கறாரு?
  அப்பத ்தானே எல்லோரட சொத்தையெல்லாம் பிடுங்கலாம்!
                        வி.சாரதிடேச்சு

ஆனாலும் அவரைப்போல ஒரு முன் யோசனைக்காரரை பார்க்க முடியாது!
  ஏன்?
கல்யாணபத்திரிக்கையோட கூடவே ஒரு மொய்கவரையும் குடுக்கிறாரே!
                         ஜா.ரவி
அரண்மணை ஆராய்ச்சிமணியை ஏன் ஒரே தடவை அடித்தாய்?

மிஸ்டு கால் கொடுத்தேன் மன்னா!
                     தீபிகா சாரதி

< b>மனைவி ஒரு மந்திரி சரிதானே!
இல்லப்பா மந்திரியை அடிக்கடி மாத்தலாமே!
                        ருக்மணி தேசிகன்.

பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை!
நிஜமாவா?
 செக்கிங் ஏறினால்தான் கவலை!
                  வி. சாரதி டேச்சு
ஏன் உன் வீட்டு வேலைக்காரியை வேலையை விட்டு நிப்பாட்டிட்டே?
அவளும் என் புருஷனை கேவலமா திட்டுறது சந்தேகத்தை குடுத்தது!
             &n bsp;              டி.சேகர்.
தலைவரோட தமிழ் மொழிபெயர்ப்பு தாங்க முடியலை!
எப்படி?
பேங்க் பாஸ் புக்கை 'தேர்ச்சிபுத்தகம்'னு சொல்றாரு!
         பி.அப்பாதுரை
அவரு ரொம்ப டுபாக்கூரா?
ஆமா!குற்றப்பத்திரிக்கைக்கு பொறுப்பாசிரியரா இருக்கறதா சொல்றாரு!
                          லெ.நா.சிவகுமார்

தலைவருக்கு வாஸ்து நம்பிக்கை ரொம்ப ஜாஸ்திப்பா!
என்ன?
கன்னத்� ��ுல விழுந்த அறைக்கு வாஸ்து பார்க்க வாஸ்து நிபுனரை தேடுறாரே!
                 பி.ஜி.பி இசக்கி


< div class="MsoNormal" style="background-color: #d9ead3;">கட்சி ஆபிஸுக்கு எதிரே ஓட்டல் நடத்தறவனுக்கு ரொம்ப கொழுப்புத் தலைவரே!
ஏன்யா என்னாச்சு!
ஜெயில் சாப்பாடு கிடைக்குமுனு போர்டு வச்சிருக்கான்!
                            பா.தீபன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


http://navasakthy.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger