Thursday 29 March 2012

மீண்டும் தண்ணீர் சண்டை?

 
 
சதானந்த கவுடா
''காவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் தலையிட வேண்டும்.காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்துடன் மோதல் போக்கை கடைபிடிக்க கர்நாடகா விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். பிரதமருடன் இது குறித்து விரைவில் பேச உள்ளேன்"
என்று கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடுக்கு தண்ணீர் கண்டம் போலிருக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு அண்டை மாநிலத்துடன் நதி நீர் பங்கீடிடிற்காக சண்டை போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
இவ்வளவு நாள் முல்லைப்பெரியாறுடன் சண்டை போட்டு அது முடியாமல் அமுங்கி இருக்கிறது.எந்த நேரமும் மீண்டும் எழலாம்.
அதற்குள் இப்போது காவிரி.
அடுத்து கிருஷ்ணா,பாலாறு என்று ஆந்திராவுடன் பேச்சு வார்த்தை.
மேலும் சதானந்தா கூறுவதையும் கேட்டு விடுங்கள்.
"இவ்விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், தமிழகம் நீதிமன்றத்தை நாடிவிட்டதால் இனிமேல் பேசி பயனில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளேன். காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா எந்த ஒரு தவறும் இழைக்கவில்லை. நடுவர்மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் அளிக்கப்பட்டுவருகிறது. கோடை காலத்தில் கர்நாடகா அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுவதாக தமிழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு கூடுதல் நீரை எடுக்கவில்லை.
தமிழகத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுக்கும். தமிழக மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடகாவின் நலன் காக்க தேவைப்படும் ஆலோசனைகள் பெறப்படும். சட்டப்படியே கர்நாடக அரசும் இப்பிரச்னையை கையாளும். எக்காரணத்தைக் கொண்டும் கர்நாடக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படுவதை இந்த அரசு அனுமதிக்காது. எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை."
இவ்வாறு சதானந்த கவுடா கூறியுள்ளார்.
தமிழ் நாடு இப்படி ஒவ்வொரு அணடை மாழிலங்களுடனும் சண்டை போட்டு தண்ணீர் பெற்று வாழ்க்கையை ஓட்டுவது எத்தனை நாட்கள் ஓடும்.
உலக அமைப்பு ஆய்வு அடுத்த உலகப் போர் என்றால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறது.
எனவே வருங்காலம் இச்சண்டையை தீர்க்காமல் மேலும் அதிகப்படுத்தவே செய்யும் என்று தெரிகிறது,
நதி நீர் இணைப்பு இதற்கு விடையாக இருக்கும்.ஆனால் அதில் ஆளும் காங்கிரசு இளவரசு ராகுலுக்கு விருப்பம் இல்லை என்பதால் மத்திய அரசு அத்திட்டத்தை பரணில் வீசி விட்டது.
காவிரி ,பாலாறு,கிருஷ்ணா மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் தமிழகம் வழியேதானே கடலுக்கு போகிறது.
வீணாக கடலுக்கு போகும் வழியில் சில இடங்களில்தடுப்பணை கட்டினால் அந்த நீரை நாம் பின் பயன் படுத்தலாம்.அதற்கு இப்போதைய வழிசரியாக இருக்காது.
பக்கவாட்டில் உபரி நீர்சென்றூ சேகரமாகும் படி ஒரு துணை வழி அமைத்து அதில் தடுப்பணைகளைக்கட்ட வேண்டும் .
தற்போதைய வழியில் சாதாரணமாகவும் ,மழை-வெள்ளக்காலங்களில் அந்த புறவழி மூலம் அதிக அளவில் வரும் நீரை வெளியேற்றி சேகரிக்கலாம்.அத்துடன் நம் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதையும் தடுக்கலாம்.
இஸ்ரேல் திராட்சை

நிலத்தை நீரும் இதன் மூலம் அருகில் உள்ள பகுதிகளிலும் அதிகரிக்கும்.
ஆற்று வசதி இல்லாத வறண்ட இஸ்ரேல் தனது பகுதியை எப்படி வேளாண்மை மூலம் செழிப்பாக்கியுள்ளது என்பதை நமது நீர் மேலாண்மை அலுவலர்களை சென்று பார்த்து பயின்று வர அனுப்பி அவர்களின் முறையை நமது தமிழ் நாட்டில் செயல் படுத்தி பார்க்க வேண்டும்.
இது வரை சில நேரம் சென்ற தமிழக நிபுணர் குழு பேரிச்சை பழங்கள் வாங்கி வந்ததுடன் தங்கள் ஆராய்வை முடித்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இனி யாவது அதை செயல் படுத்தி அண்டை மாநிலங்களுடன் நடக்கும் காலமுறையிலான சண்டையை நிறுத்துவோமாக.

சுகுமாரன்



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger