பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்குவதாக பிரதமர் மன்மோகன் சிங் அண்டை நாட்டு பிரதமர் கிலானியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டிற்காக தென்கொரியா தலைநகர் சியோல் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அங்கு பிரதமர் யூசுப் ராஸா கிலானியை சந்தி்தது பேசினார். அப்போது அவர் பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்க முன்வந்துள்ளார் என்று பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (மொதல்ல, தமிழ்நாட்டுக்கு தாங்கப்பா!).
பாகிஸ்தானின் மின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த மின்சாரம் உதவும் என்றும், அது பஞ்சாப் வழியாக உடனே அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
மன்மோகன் சிங்கின் இந்த பெருந்தன்மைக்கு கிலானி நன்றி தெரிவி்ததுள்ளார். ஆனால் இது குறி்த்து இருநாட்டு அரசுகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
அந்த சந்திப்பின்போது மன்மோகன் சிங் கடந்த முறை மாலத்தீவில் வைத்து கிலானியை சந்தித்துப் பேசியதை நினைவு கூர்ந்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?