தற்போது இத்தாலியில் வசித்து வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணுடன், ராகுல் காந்தி பிரான்ஸில் சுற்றினார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பின்னாலேயே செல்வதை முழு நேர வேலையாக மாற்றிக் கொண்டுள்ளார் சாமி. இருவர் மீதும் சரமாரியான புகார்களை அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி குறித்த ஒரு புதிய செய்தியை ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்ச் 13ம் தேதி அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ராகுல் காந்தி இப்போது அழகான ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். இத்தாலியில் செட்டிலாகி விட்ட, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவருடன் அவர் பிரான்ஸில் காணப்பட்டார். அந்தப் பெண்ணின் கையில் திருமண மோதிரமும் பளிச்சிட்டது என்று கூறியுள்ளார் சாமி.
சமீபத்தில்தான், தனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து விட்டதாக பிரேக்கிங் நியூஸ் கொடுத்தார் சாமி. இதையடுத்து மார்ச் 14ம் தேதி அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், இந்த ஆண்டு இறுதிக்குள் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வரப் போவதைப் பாருங்கள். அதன் பிறகு திஹார் சிறை நிரம்பி வழியும் என்று சீரியஸாகவே கூறியிருந்தார்.
ஏற்கனவே உ.பி. சட்டசபைத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது மார்ச் 9ம் தேதி ராகுல் காந்தியை கடுமையாக வாரி ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார் சாமி. அதில், அகிலேஷுக்கும், இந்த 'புத்து' ராகுல் காந்திக்கும் என்ன வித்தியாசம். அகிலேஷுக்கு 38 வயதாகிறது, 3 குழந்தைகள் உள்ளனர். ஆனால் புத்துக்கு 42 வயதாகிறது, இன்னும் குழந்தையாகவே இருக்கிறார் என்று வம்பிழுத்திருந்தார் சாமி. புத்து என்பதற்கு இந்தியில் முட்டாள் என்று பொருள்!.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?