ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினிக்கு முதல் வகுப்புச் சிறை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ராஜிவ் கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் கடந்த திமுக ஆட்சியில் அவரை விடுதலை செய்யும் கோரிக்கை எழ திமுக அரசோ அவர் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவருக்கு வழங்கப்பட்ட முதல் வகுப்புச் சிறை வசதியை ரத்து செய்ததோடு நன்னடத்தை விதிகளிலும் குற்றங்களை பதிவு செய்து வந்தது.
இந்நிலையில் இந்த ரத்துக்கு எதிராக நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவொன்றை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் நளினிக்கு முதல் வகுப்பு உரிமையை ரத்து செய்த முந்தைய அரசின் ஆணையை ரத்து செய்து அவருக்கு முதல் வகுப்பு வசதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னர் வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட நளினி அவரது கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டதையடுத்து மீண்டும் அதிமுக ஆட்சியில் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?