Saturday, 3 March 2012

சிபிசிஐடி யாக வரும் சீமான்

 

சீமான், முரளி, ஐஸ்வர்யா தேவன் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படம் கண்டுபிடி கண்டுபிடி. முரளி-ஐஸ்வர்யா தேவன் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை தொடர்ந்து ஏற்படும் திகில் நிறைந்த புதிர்கள் அதனை சிபிசிஐடி யாக வரும் சீமான் புலனாய்வு செய்வது தான் படத்தின் விறு விறுப்பான திரைக்கதை.

தமிழ் சினிமாவில் எத்தனையோ புலனாய்வுப் படங்கள் வந்திருந்தாலும் ஒரு யதார்த்தமான அதே நேரம் புலனாய்வு அதிகாரிகளின் புலனாய்வுத் தந்திரங்கள், அதற்காக அவர்கள் மெனக்கெடுதல்கள் என புதிதாகச் சொல்லும் படமாக KPKP இருக்கும்.

இப்படி ஒரு அமைப்பு இயங்குகிறதா, சத்தமில்லாமல் தங்கள் பணியினைப் புலனாய்வு அதிகாரிகள் ஆற்றிக் கொண்டிருப்பதன் மூலம் சமுதாத்திற்கு ஏற்படும் அச்சுருத்தல்கள் எவ்வாறு முறியடிக்கப்படுகிறது என்பதைச் சொல்லும் படமாக KPKP இருக்கும்.

அந்த அளவிற்கு சீமானும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது புலனாய்வு அதிகாரி வேடத்தை KPKP இல் பார்த்து ரசிக்கும் ஒவ்வொரு ரசிகருக்குள்ளும் அந்தத் துறையின் மீது பெரிய மரியாதை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சமாக சமுதாய நோக்கோடு அமைக்கப்பட்ட காட்சி ஒரு பசுமைப் புரட்சிக்கே வித்திடப்போகிறது என்றால் அது மிகயல்ல. ஆம் முரளி – ஐஸ்வர்யா தேவன் திருமணத்திற்கு அவர்களை வாழ்த்த வரும் உறபினர்கள் நண்பர்களுக்கு தாம்பூலப் பையில் மரக்கன்றுகளைக் கொடுத்து அனுப்புவதுபோல் அந்தக் காட்சியினை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராம் சுப்புராமன்.

அத்துடன் அதிக அளவில் மரம் நடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதைப் பற்றி இயக்குனர் ராம் சுப்பராமன் கூறும்போது, "எனது நண்பர் ஒருவர் திருமணத்திற்குச் சென்றிருந்த போது சாதாரணமாக பழம், தேங்காய், வெத்திலை பாக்குடன் கொடுக்கப்படும் தாம்பூலப்பைக்குப் பதிலாக மரக்கன்றுகளைக் கொடுத்தார்கள்".

எனக்கு பெரிதும் வியப்பாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுவரும் புவிவெப்பமயமாதலைத் தடுத்து அதனால் ஏற்படும் வறட்சி, இயற்கைச் சீற்றங்களில் இருந்து புவியைக் காத்து நமது அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாக விட்டுச் செல்லவேண்டுமானால் அதற்கு ஒரே வழி அதிக அளவில் மரம் நடுதலே என்பது புரிந்தது. சமூதாயத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கும்.

இந்த புனிதமான விஷயத்தை சக்தி வாய்ந்த திரைப்படத்தின் மூலம் சொல்லும் போது அனைத்து மக்களையும் சென்றடையும். அதன் மூலம் இந்த உலகசமுதாயத்திற்கு திரைப்படங்கள் மூலம் நன்மை விளைந்த மாதிரியும் இருக்கட்டுமே என்று அந்தக் காட்சியை மிகவும் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறோம் என்றார்.

படப்பிடிப்பின் போது சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நடிக்க வந்தவர்களுக்கு சம்பளத்துடன் மரக்கன்றுகளும் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். படப்பிடிப்பின் போது பேசிய வசனங்களைத் தமக்காகவே பேசப்பட்டது போல் உணர்ந்த மக்கள் தாங்கள் வாங்கிச் சென்ற மரக்கன்றுகளை ஆர்வமாக தகுந்த இடங்களில் நட்டு வளர்த்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவாவும் மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜும் இணைந்து தயாரிக்கும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger