கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் ரகுநாத். இவர் தனது சொந்த தயாரிப்பில் இயக்கும் படம் `சிறுவாணி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறுவாணி அணை மற்றும் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள ரேஸ்கோர்ஸ் ரகுநாத், மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது :-சிறுவாணி' கோவை மக்களின் தாகத்தை தீர்ப்பதை போல எனது சிறுவாணி படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் பரபரப்பாக தயாராகி வருகிறது. 1980 களில் வெளிவந்த ஊமை விழிகள், சமீபத்தில் வெளி வந்த `மைனா' போன்ற அருமையான கதையம்சம் கொண்ட படம்.
பிரபல நாவலாசிரியர் ராஜேஸ்குமார் கதைக்கு திரைக்கதை அமைத்து படத்தை நானே இயக்குகிறேன். படத்தில் 5 பாடல்கள் மெல்லிய மெலடி, குத்துப்பாட்டு, ரம்மியமான பாடல் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காதிற்கு இனிமையான பாடல்களை இசையமைப்பாளர் தேவா தந்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அந்தமான் சென்று வந்தோம். அங்கு கடலில் கதாநாயன் சஞ்சயும், கதாநாயகி ஐஸ்வரியாவும் இணைந்து பாடல் காட்சியின் போது முதுலை வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கதாநாயகியை பத்திரமாக மீட்டோம்.
தொடர்ந்து ஏனடா…! ஏனடா…! கண்ணிலே மின்சாரம் என்ற பாடல்காட்சியை 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்ஜ் பகுதியில் படமாக்கினோம். அப்போது கதாநாயகன் சஞ்சய் ஐஸ்வரியாவின் கையை பிடித்து மெதுவாக இழுத்து இதழில் முத்தமிடுவது போல் காட்சி அமைத்திருந்தேன். ஐஸ்வர்யா குறுப்புக்கார பெண் என்பதால் இந்த முத்த காட்சியில் நடிக்க 30 டேக் வரை திரும்ப திரும்ப வாங்கினார். நேரம் வேறு இருட்டிக் கொண்டிருந்தது. பின்னர் தனது தவறை உணர்ந்து முத்த காட்சியை சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.
ஒருவருக்கொருவர் -குடும்பமாய் இருந்து சிறப்பான முறையில் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பினோம். தற்போது சிறுவாணி அணைப் பகுதியில் இறுதிகட்ட படப்பிடிப்புக்கான லொக்கேசனை தேர்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?