அன்பே ஆருயிரே', 'லீ', 'மருதமலை', 'ஜகன்மோகினி' உட்பட தமிழ், தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நிலா. இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், மீரா சோப்ரா என்ற பெயரில் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். இப்போது இந்தியில் அறிமுகமாகிறார். இதுபற்றி நிலா கூறியதாவது: இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். எப்போதோ இந்தியில் அறிமுகமாகியிருக்க வேண்டும். இப்போதுதான் சரியான நேரம் கிடைத்திருக்கிறது.
தென்னிந்திய நடிகைகள் இப்போது அதிகளவில் இந்தியில் அறிமுகமாகிறார்கள். அவர்களுடன் போட்டியிட விரும்பவில்லை. இந்தி சினிமா என்பது கடல் மாதிரி பெரியது. இங்கு அவரவர்களுக்கான இடம் நிச்சயம் இருக்கிறது. கேத்ரினா, கரீனா கபூர் போல் ஒரு பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டுவீர்களா என்கிறார்கள். ஆரம்பத்தில் அப்படி ஆடுவதை விரும்பாமல் இருந்தேன். இப்போது விரும்புகிறேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது என்னை திமிர் பிடித்தவள் என்றார்கள்.
ஏனென்றால் நான் கார்பரேட் பின்னணியில் இருந்து வந்தவள். சினிமாவில் பணிபுரியும் ஸ்டைல் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தேன். அதே நேரம் கூச்ச சுபாவம் கொண்டவள் என்பதால் என் பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமலும் இருந்தேன். இப்போது எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?