Tuesday, 14 February 2012

பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது

 

மேட்டுப்பாளையத்தில் பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம், கரட்டுமேடு பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த 10ந் தேதி இரவு 8 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த 2 பேர் கற்பழித்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வந்தார்கள். பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜி.சக்திவேல் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கரட்டுமேடு பகுதியில் பதுங்கி இருந்த மனோகரன், மகேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கைதான 2 பேரையும் மேட்டுப்பாளையம் ஜுடிசியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ரபி, 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 2 பேரும் கோவை கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger