சினிமாவில் கட்டிப் பிடித்து நடிக்கவே கலவரப்படுகிற அனன்யாவுக்கு கட்டிக்கப் போகிறவர் தந்த அதிர்ச்சி இருக்கிறதே… ஆயிரம் வாட்ஸைவிட அதிகம்.
சென்ற வாரம் நடிகை அனன்யாவுக்கும் ஆஞ்சநேயன் என்ற தெழிலதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையைதான் கட்டிப்பேன் என்று கட்டுக்கோப்பாக இருந்த அனன்யாவுக்கு அவரது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை இவர்.
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் ஆஞ்நேயன் ஏற்கனவே ஒருவரை திருமதி ஆக்கியவர் என்று தெரிந்திருக்கிறது. ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருக்கு இரண்டாவது மனைவியா என்று அனன்யாவும் அவரது குடும்பத்தாரும் அதிர்ந்து போயினர். உடனே தங்களை ஏமாற்றி நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் தந்தனர். போலீஸார் விசாரித்த போது, முதல் திருமணம் நடந்ததையும், முதல் மனைவியிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போயிருப்பதையும் ஆஞ்சநேயன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நாடறிந்த அனன்யாவையே இப்படி ஏமாற்றினார்கள் என்றால் சாமானிய பெண்களின் நிலை? நெஞ்சு முழுக்க சோகத்துடன் இருக்கிறார் அனன்யா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?