ஹன்சிகா கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றார். அவருடன் அமலா பால், நவ்யா நாயர் போன்றோரும் சென்று இருந்தனர். நடிகைகளை காண மாணவர்களும், பொது மக்களும் திரளாக கூடி நின்றனர்.
அப்போது கூட்டத்தினர் மத்தியில் ஹன்சிகா திடீரென சிக்கிக்கொண்டார். ரசிகர்கள் சுற்றி வளைத்து கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். இதில் அவருக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. போலீசாரும் பாதுகாவலர்களும் விரைந்து வந்து ரசிகர்கள் பிடியில் இருந்து ஹன்சிகாவை மீட்டனர்.
பாதுகாப்பு வளைத்துக்குள் பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஹன்சிகா இதுகுறித்து கூறும்போது, என்னை நோக்கி வந்த கூட்டத்தினரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்து விட்டனர் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?