சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. காதல் கண்ணை மறைத்த நேரத்தில் அவர் செய்த ஒரு காரியம் தான் இப்போது உறுத்திக் கொண்டிருக்கிறது மனசையும் உடம்பையும்.
அதற்குள் நீங்கள் வேறு கற்பனைக்கு போனால் நாங்கள் பொறுப்பல்ல. நாம் சொல்ல வருகிற விஷயமே வேறு. பிரபுதேவாதான் தன் உலகம் என்று சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தன் கைகளில் ஆசை காதலரின் பெயரை பச்சை குத்திக் கொண்டிருந்தார் அவர். இப்போது காதல் முறிந்துவிட்டது. அதற்காக ஐயோ பாவம். அந்த கை என்ன செய்யுமாம்?
அப்படியே பளிச்சென்று அதே பெயரை தாங்கியபடி நடமாடிக் கொண்டிருக்கிறது. பார்க்கிற இடத்திலெல்லாம் பல் இளிக்கும் இந்த பெயரை எப்படி அழிப்பது என்பதுதான் நயன்தாராவின் இப்போதைய தலையாய பிரச்சனையாக இருக்கிறதாம்.
தோல்பொருள் துறை வல்லுனர்கள் இதற்கு தனி சொல்யூஷன் கொடுத்திருக்கிறார்களாம். எப்படி?
அந்த இடத்தை அப்படியே ஒரு டிசைனால் மறைத்துவிடுவது. பெயரும் வெளியில் தெரியாது என்பதுதான் அவர்கள் தரும் ஐடியா. மேலும் மேலும் அந்த இடத்தில் அப்பிக் கொள்வதை விட, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பழைய நிலைமைக்கே போய் விடலாம் என்று கருதுகிறாராம் நயன்தாரா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?