ராஜ்கிரண் ஜோடியாக "மாணிக்கம்", விஜய்யுடன் "சந்திரலேகா" படங்களில் நடித்தவர் வனிதா. இவர் நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷ¨ம் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். பின்னர் ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மகன் விஜய் ஸ்ரீஹரி, தந்தை ஆகாஷ¨டன் வசித்தார். மகனை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா வற்புறுத்தினார். ஆகாஷ் மறுத்தார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. விஜயகுமார் தாக்கப்பட்டார். ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். வனிதா போலீஸ், கோர்ட்டு என்று சென்றார். அனால் மகன் விஜய் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். இதனால் வனிதாவிடம் மனமாற்றம் ஏற்பட்டது. மகனுக்காக இரண்டாவது கணவரை பிரிந்தார்.
ஆகாஷ¨டன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். அதன்படி ஆகாஷ¨ம் வனிதாவும் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். பொதுநிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கிறார்கள். புத்தாண்டை ஓட்டலில் ஒன்றாக கொண்டாடினார்கள். அப்போது போட்டோவுக்கு சேர்ந்து போஸ் கொடுத்தனர். விஜய் ஸ்ரீஹரிக்கு வனிதா இரண்டாவது கணவருடன் வசிப்பது பிடிக்கவில்லை என்றும் அவனுக்காகவே மீண்டும் முதல் கணவரோடு சேர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?