முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மலையாள நடிகர், நடிகைகள் கேரள அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெழுகுவர்த்தி ஏந்தியும் ஊர்வலம் நடத்தினர். இதில் அங்குள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். முல்லைப் பெரியாருக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு பதிலடியாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரதம் வருகிற 8-ந்தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.
இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து புறப்பட்டுச்செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இதுபற்றி ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடக்கிறது. இதில் இயக்குனர்களுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதா? அல்லது தனியாக போராட்டம் நடத்துவதா? என்று விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?