Monday 5 December 2011

நான் அறியாத போதி தர்மன்....!!!



நான் : ஹலோ எப்பிடிம்மா இருக்கே...?

மனைவி [[இன் மும்பை]] : நான் நல்லா இருக்கேன்'ப்பா நீங்க எப்பிடி இருக்கீங்க..?

நான் : நான் நல்லாயிருக்கேன், ஆமா பிள்ளைங்க எங்கே...?

மனைவி : தம்பி [[மகன்]] ஸ்கூல் போயிருக்கான், பாப்பா [[மகள்]] டியூசன் போயிருக்கிறாள்.

நான் : நீ என்ன பண்ணிட்டு இருக்கே..?

மனைவி : நான் உங்க கூட பேசிட்டு இருக்கேன்..

நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

மனைவி : என்ன அவ்வ்வ்வ்வ்வ்...? ஏன் ரெண்டு நாளா போன் பண்ணலை...?

நான் : என்னாது போன் பண்ணலையா நேற்றுதானே போன் பண்ணுனேன்...?

மனைவி : மறந்து போச்சா உங்க போனில் நீங்க கடைசியா எனக்கு போன் பண்ணினது எப்போன்னு செக் பண்ணி பாருங்க...

நான் : [[மறந்தது நியாபகம் வந்து]] ஹி ஹி அது வந்தும்மா நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேனா அதான் மறந்து போச்சு ஹி ஹி...

மனைவி : என்ன ஹி ஹி, பக்கத்துல நான் இல்லைங்கிற தைரியமா...? எங்கே போனாலும் இங்கேதானே வரணும் அப்போ வச்சிக்கிறேன் பஞ்சாயத்தை, ஊரில் இருக்கும் போதே இன்டர்நெட்டை ஒப்பன் பண்ணி வச்சிகிட்டு காப்பி ஆறிப்போனதே தெரியாமல் ஆன்லைன்ல குடைஞ்சிகிட்டு இருந்த ஆள்தானே நீங்க தெரியாதா என்ன...? என்னைவிட உங்களுக்கு அதுதான் பெருசா போச்சா...?

நான் : செல்லம் வெரி ஸாரி, இனி காலையில முதல் வேலையே உனக்கு போன் பண்ணுறதுதான் சரியா ஹி ஹி...

மனைவி : சரி சரி சாப்புட்டீங்களா'ப்பா...?

நான் : ஆமாம் காலையிலேயே பிரேக் ஃபாஸ்ட் சாப்டாச்சு.....

பாவிகளா பேஸ்புக், வலைத்தளம், பஸ் லாரி ஆட்டோ ரிக்சா'ன்னு போயிட்டு ஊருக்கு போன் பண்றதையே மறந்துருக்கேன் அவ்வ்வ்வ்வ், யப்பா இனி வீட்டுக்கு முதல்ல பேசிட்டுதான் இங்கே வருவேன் ஹி ஹி, விக்கிக்கு அடி செவிள்ல விழுதுன்னா எனக்கு அடி வாயில விழுது, இப்போ போன்'லையும் விழ ஆரம்பிச்சுடுச்சு...!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்றுதான் ஏழாம் அறிவு படம் பார்க்க முடிந்தது, சீனா, ஜப்பான், தாய்லாந்த் போன்ற நாடுகள் ஒரு தமிழனை தெய்வமாக வணங்குவது புதிய, ஆச்சர்யமான செய்தி [[இன்றைய தலைமுறைக்கும், எனக்கும் ஹி ஹி]] தமிழகத்தில் ஏராளமானோர்க்கு இது தெரியவில்லை என்பது இன்னொரு ஆச்சர்யம்...!!!! சீனாக்காரன் குழந்தைகளுக்கு தெரிஞ்ச போதி தர்மனை நம்முடைய இளம் தலைமுறைகளுக்கு தெரியவில்லை..?

கதை இதுதான், சீனாக்காரன் நம்ம தமிழனை சரியா பயன்படுத்திகிட்டான், நம்ம ஆளுங்க சாப்புட்டு தூங்கிட்டாங்க, இன்னும் தூங்குராயிங்க அம்புட்டுதான் ஹி ஹி...!!!


என்னோடு வேலை பார்க்கும் அனில் அண்ணனுக்கு போதி தர்மனை பற்றி தெரியுமாம் முன்பே, எப்பிடியோ ஒரு தமிழனை இன்றைய தலைமுறைகளுக்கு காட்டியமைக்கு முருகதாஸ்'க்கு ஒரு ராயல் சல்யூட்...!!!


ஸ்ருதி ஹாசன் நடிப்பு அவ்வ்வ்வ் ரகம், அவருடைய குரல் பயமாக இருக்கிறது, அவர் பேசிய வசனம், கண்ணில் தண்ணீரை வர வைத்துவிட்டது, " உன் லவ்வை கொண்டு போயி குப்பையில் போடு" இதே வசனத்தை ரஜினியை பார்த்தோ, விஜய்யை பார்த்தோ, அஜித்தை பார்த்தோ யாரும் கேட்டு விட முடியாதென்பது என் தாழ்மையான கருத்து...!!!


ஆமா முருகதாஸ் அண்ணே பார்வை வசியம் உண்டு ஓகே, ஆனால் கார், லாரி, கண்டெய்னர் லாரி, பைக் எல்லாம் இந்த பார்வை வைத்தியத்தில்  இப்பிடி பாடாய் படுத்துதே அண்ணே அது எப்பிடி...? திஸ் இஸ் டூ மச்'னு உங்களுக்கே தெரியலையா...? சலிப்பா இருந்துச்சு அண்ணே...!!!


இதுல ஒரு வயதான துப்புரவு தொழிலாளி, சைனாகாரனின் பார்வை வசியத்துல வந்து கூங்பூ கதகளி ஆடுவார் பாருங்க, டிவி'ல உடனே ரிமோட் கண்ட்ரோல விட்டரியனும் போல இருந்துச்சு அண்ணே முடியல...!!!


அண்ணே முதல்ல வர்ற குத்துப்பாட்டு சைனா பாஷைதானே, எல்லா வார்த்தையும் அருமையா புருஞ்சுது அண்ணே, கண்ணுல தண்ணி தண்ணியா கொட்டுச்சு அந்த பாட்டை பார்க்கும்[[கேட்க]] போது...!!!


யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்னை விட்டு போனதென்னம்மா பாடல் அருமையா இருக்கு...!!! 

சைனாக்காரன் இம்புட்டு கொலைகள் செய்தும் சென்னை போலீஸ் எல்லாம் ஜெயஜோதி வீட்டுலையா இருந்தாங்க...? சரியா நீங்க குழம்பி எங்களை தெளிய வச்சிட்டீங்க அண்ணே...!!!


பிடித்த வசனங்கள் [[கொஞ்சம்தான்]]

* ஸ்ருதி யானை மீது ஏறியதும், ஐயோ குத்துது...
அதுக்காக டைல்ஸ் எல்லாம் போடமுடியாது.


* நாம போறது ஒரு பேஷன்ட் மேலயா...?
அதுக்காக யானையை தூக்கிட்டு போகமுடியாது.

* மியூசியத்துல வில்லையும், வாளையும் வச்சி பூட்டிட்டோம்..!!!

* வீரத்திற்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கோ..

நாம் நிறைய தடயங்கள், சுவடிகள் அறிய நூலகங்களை மிஸ் பண்ணிட்டோம் என சூர்யா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, இன்னும் இழந்துட்டுதான் இருக்கோம்...!!!


கடைசியாக சூர்யா டிவி இண்டர்வியூல சொல்ற விஷயங்களை நல்லா நடைமுறை படுத்துவோம் தமிழர்களே...!!!


என்னைப்போல போதி தர்மனை தெரியாதவங்களுக்கு, போதி தர்மனை கொண்டு சேர்த்த முருகதாஸ்'க்கும், உதயநிதிக்கும் நாஞ்சில் மனோ'வின் ராயல் சல்யூட் நன்றி...!!!


டிஸ்கி : முல்லைப்பெரியாருக்கும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், விலைவாசி உயர்வுக்கும், ஊழலை செய்துட்டு ஜெயில்ல இருந்து மகாராணி மாதிரி வெளியே வந்து தியாகியா பில்டப் கொடுக்குறவுங்களுக்கும் ஒரு போதி தர்மன் வராமலா இருக்கப்போறான் பார்ப்போம்...!!!




http://galattasms.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger