விக்ரமை வைத்து விஜய் இயக்கும் புதிய படத்துக்கு தாண்டவம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்குப் படமாக உருவாகும் தாண்டவத்தில் விக்ரம்-அனுஷ்கா-எமி ஜாக்ஸன்-சந்தானம் நடிக்கிறார்கள்.
தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அனுஷ்கா. அந்தப் படத்தில் பாடாமல் போன டூயட்டையெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து இதில் பாடப்போகிறார்களாம்.
ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கை கவனிக்கிறார்.
படத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் அமெரிக்காவின் பல்வேறு வித்தியாசமான லொகேஷன்களில் படமாக்கப்படவிருக்கின்றன.
இந்திய திரையுலகில் வித்தியாசமான ஆக்ஷன் படமாக அமைய வேண்டும் என்பதால், ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுடன் கைகோர்த்துள்ளாராம் விஜய். 2012 சம்மர் ஸ்பெஷலாக வருகிறது இந்த 'தாண்டவம்!'
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?