ஜெய் தெலுங்கானா என்று கோஷம் போட மறுத்ததால் தன் காரை தெலுங்கானா ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்கியதாக ஸ்ரேயா குற்றம்சாட்டியுள்ளார்.
அல்லரி நரேஷுடன் புதிய தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஹைதராபாத்தில் உள்ள ரங்கா பல்கலைக்கழகத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
அப்போது அங்கு வந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று கூச்சலிட்டனர். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால், 'ஜெய் தெலுங்கானா' என்று முழக்கம் இட வேண்டும் என்று மிரட்டினர்.
இதற்கு ஸ்ரேயா மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் ஸ்ரேயாவின் கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஸ்ரேயாவின் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இது குறித்து ஸ்ரேயா கூறுகையில், "போராட்டக்காரர்கள் என்னிடம் நடந்துகொண்டது எந்தவிதத்தில் நியாயம்? ஜெய் தெலுங்கானா என்று கூறச்சொல்கிறார்கள். கற்களை வீசி தாக்குகிறார்கள்.
ஆனால் இந்த சம்பவங்களை போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சுதந்திர நாட்டில் இதுதான் பாதுகாப்பா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?