முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க 'வழக்கு எண் 18/9' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி சக்திவேல். முழுக்க முழுக்க ஸ்டில் கேமரா மூலம் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார்கள். இயக்குனர் லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவற்றை பார்த்தவர்கள் " பாலாஜி சக்திவேல் ஒரு வித்தியாசமான முயற்சி செய்து இருக்கிறார் " என்று பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், 'வழக்கு எண் 18/9' படத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட 'வேட்டை' திரைப்படம் டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'வழக்கு எண் 18/9' வெளியீடு ஏன் தாமதமாகிறது என்று விசாரித்தால் " வழக்கு எண் 18/9 படத்தினை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப தீர்மானித்து இருக்கிறோம். இதனால் படத்திற்கு ஆங்கில சப்-டைட்டில் போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்பணி முடிவடைந்த உடன் அனைத்து திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். அனைத்து விழாக்களிலும் இப்படம் விருது பெறும் " என்கிறது படக்குழு.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?