பொதுவாக பஹ்ரைனில் வேலை செய்யும் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு, ரெண்டு பேருக்கு ஒரு ரூம் வீதம் ஹோட்டல் நிர்வாகம் கொடுப்பது உண்டு, அப்படி தங்கியிருந்த ஆரம்ப காலத்துல நடந்த ஒரு சிரிப்பு சம்பவம்.
ஒரு நாள் அடுத்த ரூம் பாட்னர்களின் பார்ட்டி நடந்தது. பொதுவாக ரூம்ல தங்கி இருக்கும் மலையாளிகள் சொந்த அண்ணன் தம்பியா இருந்தாலும் கூட அவிங்க அவிங்க பெட்டியை பூட்டி சாவியை மறைத்து வைப்பது வழக்கம்.
நாலுபேர் கொண்ட பார்ட்டி, பார்ட்டி தொடங்கியது [[நான் ரொம்ப நல்லவன் முதல்லயே சொல்லிர்றேன், தக்காளி ரேஞ்சுக்கு நினச்சிராதீங்க]] முதலாவது ரவுண்ட் ரெட் லேபல் உள்ளே போனது, ஜாலியாக ஒருவரை ஒருவர் கலாயிக்க தொடங்கினார்கள்.
கூட வேலை பார்ப்பவர்களின், மேனேஜர்களின் டவுசர்கள் துகுலுரியப் பட்டன. ஜாலியாக பேச்சு நடந்து கொண்டிருந்தது, இரண்டாவது ரவுண்ட் போகவும் கரண்டும் உயிரை விட்ருச்சி....
எலக்ட்ரீசியன கூப்பிட்டு சரி செய்து விட்டு, டான்ஸ் ஆரம்பம் ஆச்சு, மூணாவது ரவுண்ட்ல கொஞ்சம் தள்ளாட்டம் ஆரம்பிச்சது, நாலாவது ரவுண்ட் எல்லாரும் நிக்கமுடியாமல் சோபாவில் உக்கார்ந்து கொண்டே நடனம் [[நடனமா அது..??]] செய்தார்கள்.
ஐந்தாவது ரவுண்ட் ரெண்டுபேர் மட்டையாகி சாய்ந்தார்கள், சாப்பாடு அவர்கள் வாயில் வலுகட்டாயமாக திணிக்கப் பட்டது. அதில் ஒருத்தன் ஆம்பிலேட்டும் போட்டுட்டான். எல்லாரும் சாப்பிட்டு [[எங்கே எல்லாம் அப்பிடியேதான் கிடந்தது]] கிளம்பினோம். நான் ஒருத்தனை தூக்கிட்டுதான் போனேன்.
அப்போது அதே ரூமில் தங்கியிருந்த நண்பன் அலறினான், என்னடான்னா டேய் சூட்கேஸ் சாவியை காணோம்டா'ன்னு சொல்ல தேடினோம் தேடினோம் கிடைக்கவே இல்லை, ரூமை சல்லடையாக போட்டு தேடியும் கிடைக்கவில்லை, சரி நாளை தேடலாம்னு சொன்னாலும் அவன் கேட்கவில்லை நாங்கள் போனபின்பும் விடிய விடிய தேடியும் சாவி கிடைக்கவில்லை.
இப்படியிருக்க, ஒரு ஆறேழு நாள் கழிச்சி இன்னொரு ரூம்ல பார்ட்டி நடந்தது. அங்கேயும் நாலு நண்பர்கள்தான், அவர்கள் சீட்டு விளையாடி கொண்டே சரக்கடித்தார்கள் [[எனக்கு சீட்டு விளையாட்டை கண்டாலே வாந்தி வாந்தியா வரும்]] முதல் ரவுண்டு போச்சு...
சீட்டு விளையாட்டு ஜோரா நடக்குது, அதில் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தான் நம்ம சாவி தொலைத்த நண்பன். இரண்டாவது ரவுண்ட் போக சீட்டு கட்டை வேகமா போட்டு விளையாடினார்கள், மூன்றாவது ரவுண்டும் போச்சு உள்ளே, சாவி தொலைத்தவன் ஒரு மாதிரியா செருமினான்.
மூணாவது ரவுண்டும் உள்ளே போனது, சீட்டின் வேகமும் கூடியது, நாலாவது ரவுண்ட் கிளாசில் ஊற்றி ஒரு சிப் குடித்த சாவி நண்பன், ஆங் என சொல்லி இருக்கையை விட்டு எழும்பினான் சீட்டை கீழே போட்டுவிட்டு, இதோ இப்போ வாறேன்னு சொல்லிட்டு அவன் ரூமை நோக்கி ஓடினான்...
நானும் அவன் பின்னால் அவனுக்கு தெரியாமல் போனேன், பயபுள்ள எங்கேயோ கைவிட்டான். எடுத்தது சாவியை, என்னடான்னு கேட்டேன் சாவி கிடச்சிருச்சுன்னு சொல்றான், நண்பர்களிடம் வந்து சொல்லி சிரி சிரின்னு சிரிச்சோம்...
என்னா நடந்துச்சுன்னா, முதல் நாள் பார்ட்டியில மூணாவது ரவுண்ட் அடிச்சதும் இவன், எங்கே ஓவரா குடிச்சி மட்டையாகிருவோமோ'ன்னு பயந்து யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் சாவியை மறைத்து வைக்க, பார்ட்டி முடிஞ்சதும் அடிச்ச மப்புல சாவி வச்ச இடத்தை மறந்துட்டான்.
இப்போ நடந்த பார்ட்டியில மூணாவது ரவுண்ட் அடிச்சதும் நியாபகம் வந்துருச்சி பயபுள்ளைக்கு, இப்பவும் யாராவது ஏதாவது தொலைச்சா எங்களுக்கு இவன் நியாபகம்தான் வரும், அப்படியே யாராவது எதையாவது தொலைச்சா முதல் கேள்வி நீ நேற்று எத்தனை பெக் அடித்தாய் என கேட்பது இப்பவும் எங்களுக்குள்ளே வழக்கமாக இருக்கிறது...!!!
"மனோ"தத்துவம் : அநேகமாயிரம் கார்கள் உருண்டோடினாலும், ரோடுகள் கவலைப்படுவதில்லை...!!! [[டியூட்டிக்கு ரோட்டில் நடந்தே போவோர் சங்கம்]]
http://tamil-kurippugal.blogspot.com
http://tamil-kurippugal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?