மதுரை மெக்கானிக் மனைவியை கொலை வழக்கில் கைதான, பக்கத்து வீட்டு கல்லூரி மாணவர், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் விரகனூர் அடுத்த கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு எட்டயபுரத்தில் தனியே வசித்து மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.
முத்துலட்சுமி, தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முத்துலட்சுமி வசித்து வந்த களஞ்சியம் நகர் வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரித்து வந்தனர்.
விசாரணையில் முத்துலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் முனீஸ்வரன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிந்தது. மேலும் முனீஸ்வரனுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரித்தனர். இதில் முத்துலட்சுமியை கொலை செய்ததாக முனீஸ்வரன் ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து முனீஸ்வரன் போலீஸ் வாக்குமூலத்தில், "நான் அழகர்கோவில் சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய எங்களிடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு, பின் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.
முத்துலட்சுமியின் மகனும், மகளும் பள்ளிக்கு சென்றவுடன் என்னை அவரது வீட்டின் பின்புற கதவின் வழியாக தினமும் அழைப்பார். மாலையில் குழந்தைகள் பள்ளியில் வீடு திரும்பும் வரை உல்லாசமாக இருப்போம். இதனால் எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒருகட்டத்தில் என்னால் அவருடன் செக்ஸ் உறவு கொள்ள முடியவில்லை. அதையடுத்து அவர் எனக்கு வாயக்ரா மாத்திரைகளை வாங்கி தந்து, அவருடன் தினமும் உறவு கொள்ள வற்புறுத்தினார். தினமும் அவருடன் உறவு கொண்டதில் எனக்கு நரம்பு தளர்ச்சியும், கல்லூரிக்கு செல்லும் ஆர்வமும் குறைந்தது.
ஒரு கட்டத்தில் கல்லூரிக்கு செல்வதை அடியோடு விட்டுவிட்டு முத்துலட்சுமியுடன் உறவு கொள்வதே கதி என இருந்துவிட்டேன். 2 பேரும் உல்லாசமாக இருக்க தேவையான பணத்திற்காக, கேபிள் டிவி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைக்கு சென்றேன். அதில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் முத்துலட்சுமியிடமே கொடுத்தேன்.
இந்நிலையில் மொத்த வசூல் தொகையாக கிடைத்த 20,000 ரூபாயை அவரிடம் கொடுத்திருந்தேன். அதை திரும்ப கேட்ட போது, என்னிடம் தர மறுத்துவிட்டார். மேலும் அவரிடம் இத்தனை நாட்களாக உல்லாசமாக இருந்ததற்காக அது கழித்து கொள்வதாக கூறினார். 20,000 ரூபாய் பணபாக்கியை குறித்து கேபிள் டிவி உரிமையாளர் எனது பெற்றோரிடம் வந்து கூறிவிட்டனர்.
இதனால் எனது பெற்றோருக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சில நாட்கள் பேசாமல் இருந்தோம். அப்போது தரவேண்டிய பணத்தில் 12,500 ரூபாய் மட்டும் திரும்ப தந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் என்னை முத்துலட்சுமி மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்தார்.
அங்கு சென்றபோது என்னை உறவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். அப்போது பணம் கேட்டேன். அதற்கு என்னை அவர் தாக்கினார். நான் அவரை திரும்ப தாக்கி கொலை செய்தேன்", என்றார்.
இளம் வயதில் தவறான உறவுகளில் சிக்கி வாழ்க்கையை இழந்த கல்லூரி மாணவன் முனீஸ்வரனை போலீசார் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?