Sunday 2 October 2011

தக்காளி [விக்கி அல்ல] சட்னி...



நான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.

என்னோடு மூன்று எத்தியோப்பியன், இரண்டு பிலிப்பைன்ஸ், ஒரு மொரோக்கோ வெயிட்டர்ஸ்[பெண்கள்] வேலை செய்து வந்தார்கள். இவர்கள் வேலை என்னவென்றால் டியூட்டிக்கு வந்ததும் எல்லா டேபிளையும் சுத்தம்  செய்து, கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டில், உப்பு, மிளகு இப்பிடிபட்ட இன்னும் பிற அயிட்டங்களையும் கிளீன் செய்ய வேண்டும். இவர்கள் நான் டியூட்டிக்கு வரும் முன்னரே வந்து விடுவார்கள்.

   அப்படி ஒரு நாள் நான் அரை மணி நேரம் முன்பே டியூட்டிக்கு வரும் ஒரு சூழ்நிலை நேர்ந்ததால், பாரினுள் யாருமில்லை. அப்பிடியே கமுக்கமாக பார் கவுண்டரை எட்டி பார்த்தேன். அங்கே நீனா என்கிற பிலிப்பைன்ஸ் வெயிட்டர்ஸ் எனது சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள். [பார்மேன் சேரில் வெயிட்டர்ஸ் அமர அனுமதி கிடையாது இருப்பினும் நான் கண்டு கொள்ளமாட்டேன் பெண் அல்லவா]

  மெதுவாக சென்று [அங்கே என்னமோ தப்பாக நடக்கிறது என என் உள்மனம் சொன்னதால்] அவள் என்ன செய்கிறாள் என்று அவள் அறியாமல் உற்று பார்த்தேன்......................அவள் கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டிலை ஒப்பன் பண்ணி அவள் விரலில் ஏதோ காயம் பட்டு வந்த ரத்தத்தை அந்த குப்பியினுள் பிழிந்து சொட்டு சொட்டான ரத்தத்தை உள்ளே திணித்து கொண்டிருந்தாள்.....!!! அதிர்ச்சி ஆன நான், கோபத்தின், ஆத்திரத்தின் உச்சத்தில்..... 


நீனா...................என்று கத்தினேன். இந்த நேரத்தில் என்னை எதிர்பாராத அவளுக்கு பெரும் அதிர்ச்சி. என்ன காரியம் செய்கிறாய் நீ என எவ்வளவு சத்தம் போடணுமோ அவ்வளவு திட்டி விட்டு, கச்சப்பை தூர எறிந்தேன். அவளும் ஒன்றும் சொல்லாமல் கஸ்டமர் டேபிளை கவனிக்க போய் விட்டாள்.

   நாமதான் டியூப் லைட் ஆச்சே....!!! ஒரு மணி நேரம் கழிச்சிதான்  என் மூளைக்கு மின்னல் வெட்டியது................சம்திங் ராங், நேரே முதலாளிக்கு போன் செய்தேன். [ஜி எம் ஒரு காசுக்கும் ஆகாதவன் அதான் முதலாளிக்கு போன்] முதலாளி சொன்னார் நான் வரும் வரை யாரிடமும் சொல்லாதேன்னு சொன்னார். நான் தூரப்போட்ட பாட்டிலை எடுத்து வைத்தேன் பத்திரமாக, முதலாளி செக்யூரிட்டி அடக்கம் வந்தார்கள். அந்த பெண்ணை நேராக ஹாஸ்பிட்டல் கொண்டு போனார்கள்...

 ரத்தம் செக் செய்யபட்டது, ரிசல்ட்........எயிட்ஸ்.......................!!!! அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் தூதரகம் மூலமாக ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.

      இதை நான் ஏன் சொல்ல வர்றேன்னா, நம்ம ஆளுங்க பொதுவா வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியே ஹோட்டலில் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ஊரில் இருப்பவர்களும் நான் சொல்வதை கடை பிடியுங்கள். பாட்டலில் இருக்கும் கச்சப்போ, சில்லி சொஸ்சோ சாப்பிடாதீர்கள். கவர் செய்த பாக்கெட்டில் இருக்கும் கச்சப்போ, சில்லி ஸோஸ்சையோ சாப்பிடுங்கள் அது பாதுகாப்பானது.


டிஸ்கி : அப்பாடா  ஏதோ நம்மளால முடிஞ்சது.....

இது என் பிளாக்கிலிருந்து மீள்பதிவு.

டிஸ்கி : கடந்த பதிவில் யாழ்பாணத்தில் இருந்து வந்த மெயில் பற்றி பதிவு போடுறதா சொல்லி இருந்தேன், சிபி அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க அதை பிரசுரிக்க வில்லை ஸாரி.


ஸ்பெஷல் டிஸ்கி : ஆங்கிலத்திலோ இன்ன பிற பாஷையிலோ பதிவை வாசிக்க விரும்புவர்கள், மேலே செலக்ட் லாங்குவேஜ் என இருக்கும் பாரை கிளிக் செய்யவும்.




http://tamil-shortnews.blogspot.com



  • http://tamil-shortnews.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger